கிறிஸ்துவின் சாயல்கள் IMAGES OF CHRIST ஜெபர்சன்வில், இண்டியானா 59-05-25 1. அது மிகவும் மிக அருமையான காரியமாகும். கர்த்தருடைய வீட்டில் இருப்பதற்கு நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரே ஒரு சிறந்த இடம் மாத்திரமே உள்ளது, அது கர்த்தருடன் இருப்பது தான், அப்படித்தானே. எல்லா எல்லா கஷ்டங்களும், சோதனைகளும், வாழ்க்கையின் பிரச்சனைகளும் ஒரு மகத்தான காலைக்குள்ளாக அப்படியே கறைந்து மறைந்து போய் விடும். அவரை நாம் காணவிருக்கின்ற அந்த நேரத்திற்காக நாம் நிச்சயமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். மற்றொரு நாளில் ஒருவர் என்னிடமாக, "சகோதரன் பிரன்ஹாமே, கர்த்தருடைய வருகை சமீபமாக இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா--?” என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக அவ்விதமாக நான் நம்புகிறேன்," என்றேன். அவர், “சரி, அவ்விதம் கூறப்படுவதை நான் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றேனே," என்றார். அதற்கு நான், "ஆனால். ஒரு நாளிலே அது கடைசி முறையாக கூறப்படுவதை நீங்கள் கேட்பீர்கள்” என்றேன். பாருங்கள்-? அது சரியே. ஏனென்றால், அவர் - அவர் ஒரு நாளிலே வருவார். அது எந்த நாளாயிருப்பினும் சரி, நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், நான் .... அந்த ...'' 2. வழக்கறிஞர்களாக இருந்து பிறகு வாணிகம் செய்கின்ற மனிதர்களான சிலரிடமாக முன்னொரு நாளிலே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், ஆகவே . அப்போது அவர்கள் ...... ஒருவர் என்னிடமாக "வாழ்க்கையில் உங்கள் - உங்கள் முக்கிய குறிக்கோள் என்ன-?" என்று கேட்டார். அதற்கு நான், "ஒன்று எனக்கு உண்டு" என்றேன். அவர், "அது என்ன-?” என்றார். நான் "கிறிஸ்துவுக்கென ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும்படிக்குச் செய்வது, அது....-? ...” என்றேன். அந்த ஒரு காரியத்தைத் தான் நான்... என்னுடைய உயர்ந்த இலட்சியம், என்னுடைய ஒரே குறிக்கோள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து மகிமைப்படுவதைக் காண்பது தான். அதற்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆகவே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், இப்பொழுது நான் அவருக்கு தாழ்மையுடன் செய்யும் இந்த ஊழியமானது முப்பத்தொன்றாவது வருடமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதான சாட்சியைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் இலட்சக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்வேன் என்றால்.. அவ்வளவு காலமாக வாழும்படிக்கு எனக்கு ஆயுள் இருக்குமென்றால், அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் அவருக்கென வாழவே எனக்கு விருப்பம், ஏனென்றால் நான் ...முடிவில் வேண்டாம் என்று என்னை திருப்பி அனுப்புவார்கள் என்று நான் அறிந்திருந்தாலும் கூட, இன்னுமாக அவருக்கென வாழ்வது மிகவும் சிலாக்கியமான ஒன்றாகும். அவர் இருப்பது உண்மை மற்றும் அவர் மிக அருமையானவர் ஆவார். நாங்கள், நானும் அவரும், தனியாக, ஒன்று சேர்ந்து ஐக்கியம் கொள்வதற்கு ஈடாக, என் ஜீவியித்திலே நான் செய்த எல்லா பிரயாணங்களிலும் காணப்படுகின்ற எந்த ஒன்றிற்கும் அந்த ஐக்கியத்தை ஒப்பிடவே முடியாது. அதை விட ஒரு இனிமையான ஐக்கியம் இல்லவே இல்லை. அது மனைவி, பிள்ளைகள் மற்றும் எந்த ஒன்றானாலும் அவர்கள் பேரில் கொண்டிருக்கின்ற அன்பைக் காட்டிலும் அந்த அன்பானது, கிறிஸ்துவின் அன்பானது மிக மகத்தானதாக இருக்கின்றது. அது மிகவும் அருமையானதாகும். 3. இப்பொழுது, இந்த எழுப்புதலானது வாரம் முழுவதுமாக தொடர்ந்து நடப்பதைக் காண்பதிலும், சகோதரன் பர்னல் மற்றும் பிறர் இங்கே மகத்தான பிரசங்கங்களை நிகழ்த்துகின்றனர் என்பதைக் கேட்பதற்கும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆகவே, நாங்கள் நம்புவது என்னவென்றால் இந்த எழுப்புதலின் போது... எழுப்புதல் என்பது சபைக்குள்ளாக புதிய அங்கத்தினர்களைக் கொண்டு வருதல் என்று சிலர் எண்ணங்கொண்டுள்ளனர். அப்படி இல்லை. எழுப்புதலின் முடிவு அப்படியாக இருக்கும். ஆனால், எழுப்புதல் என்பது சபையில் ஏற்கெனவே இருப்பதை புதுப்பிப்பது என்பதாகும் (பாருங்கள்-?), அது கொண்டு வருவது என்னவென்றால்... அவை ...ஒரு சமயம் நான் கடற்கரையில் நின்று கொண்டிருந்தேன். நான் இதை அநேக முறை மேற்கொள் காட்டியுள்ளேன் என்று நான் - நான் யூகிக்கிறேன், ஆனால், அது... நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் இது நிகழ்ந்தது. முதல் முறையாக நான் கண்ட அது... சரி, அது கடல் அல்ல, அது மிச்சிகன் ஏரி ஆகும். அங்கே உலக மாநாடு நடந்த போது ஹோப்பும் நானும் அங்கே இருந்தோம். அது 1922ல் என்று நான் நம்புகிறேன். சகோதரன் ஹிக்கின், எனக்கு தெரிந்த வரையில் அது சிக்காகோவில் நடந்த போது என்று நான் நினைக்கிறேன். 4. முதல் முறையாக நான் தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய ஏரியைக் கண்டேன் . அந்த நாளில் நான் ஏரியில் இருந்து வந்த அந்த பெரிய அலைகளை பார்த்தேன். அது ஈஸ்டர் காலையில் அன்று நிகழ்ந்தது. அங்கே அவர்கள் அதிகாலை ஆராதனையை நடத்தினர். ஆகவே, அந்த பெரிய அலைகள் வருவதையும் போவதையும் நான் கண்டபோது, அப்பொழுது, ஓ, அவை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றிற்று. அப்பொழுது நான் யோசிக்க ஆரம்பித்தேன் , "பார், அந்த ஏரியில் இன்னும் அதிகமான தண்ணீர் இல்லை, அது அசையாமல் இருந் தாலும் கூட, ஆனால், அதின் அலைகள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கின்றன. அதின் தண்ணீரின் அளவு அதே விதத்தில் தான் இருக்கின்றது. ஒரு துளி அதிக தண்ணீர் கூட அதில் சேருவதில்லையே, சரி, ஏன் இந்த காற்று வந்து ஏரியை மேலும் கீழுமாக அசைக்கின்றது-?” என்று யோசித்தேன். ஏனென்றால், அந்த ஏரியில் இருக்கும் குப்பைகள் எல்லாவற்றையும் எடுத்து வெளியே போடத்தான் அப்படியாக சம்பவிக்கின்றது. பாருங்கள்-? அது ஏரியில் இருக்கும் குப்பை எல்லாவற்றையும் கரையில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது, காற்று.... ஆகவே அந்த ஏரி ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்கிறது போலான ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்-? அதில் இருக்கின்ற அழுக்கானது வெளியே போகும் வரைக்குமாக அந்த ஏரியை அது குலுக்குகின்றது, மேலும் கீழுமாக குதிக்கச் செய்கின்றது, சுற்று முற்றுமாக அசைக்கின்றது. அந்த விதமாகத் தான் ஒரு எழுப்புதலும்கூட, அது நாம் கர்த்தருடைய ஆவிக்குள்ளாக வரும்படிக்குச் செய்து, களிகூரச் செய்து, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு ஒரு நெருங்கின நடையைச் செய்யும்படிக்குச் செய்து, ஒரு மறு அர்ப்பணிப்பு மற்றும் மறு பிரதிஷ்டையைச் செய்து, எல்லா காரியங்களும், உலகத்தின் சந்தேகங்கள் எல்லாம் கரையின் மேலே தூக்கி வீசப்படும் வரைக்குமாக அப்படியாக அது செய்கின்றது. பாருங்கள்-? அந்த பொழுதிலிருந்து ஒரு சுத்தமான நிரோட்டமாக அது இருக்கும்... ஓ, அவர்கள் அதிகமாக கவனிக்க வேண்டியதாக இருக்கநேரிடாது, ஏனென்றால் எல்லாமே வழியிலிருந்து அகன்று சென்று விட்டிருக்கும். அது அருமையானதாகும். 5. சரி, தம்முடைய எழுப்புதல் இரவின்... -வாரத்தின் முதலாம் இரவான திங்கட்கிழமை இரவாக இருப்பதால் நாங்கள் உங்களை நீண்ட தேரத்துக்கு வைத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை. எழுப்புதல் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை அறிவிக்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும். எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. கடந்த சில வாரங்களாக அவர்கள் கண்ட சொப்பனங்களை என்னிடமாக கூறிய சில சகோதரரும் மற்றும் மக்களும் இங்கே இருப்பதை நான் காண்கிறேன். அந்த சொப்பனங்களின் வியாக்கியானத்தை கொண்டிருக்க கர்த்தர் எனக்கு உதவி செய்தார். நம் மத்தியில் யார் இருக்கிறார் என்றும் எத்தனை பேர் முன்பின் தெரியாதவர்கள் என்றும் அல்லது எதுவாயிருந்தாலும் அது எனக்கு - எனக்கு தெரியாது. ஆனால், கர்த்தராகிய தேவன் இன்னுமாக சொப்பனங்களுக்கு வியாக்கியானங்களை அளித்துக் கொண்டிருக்கிறார். அவை முற்றிலும் சரியாகவும் பரிபூரணமாகவும் இருக்கின்றன. யோசேப்பின் நாட்களின் இருந்த அதே தேவனாக இன்னுமாக மாறாதவராயிருக்கின்றார். இராஜா சொப்பனங்களைக் கண்ட போது யோசேப்பு அதை அவனுக்கு வியாக்கியானம் செய்தான், வியாக்கியானம் துல்லியமாக பிழையின்றி இருந்தது. அந்த சொப்பனங்கள் இன்னுமாக இன்றும் கூட நிலைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த சொப்பனத்தின் விளைபயன்கள் இன்னுமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நெபுகாத்நேச்சாரின் நாட்களிலே தானியேல்.... 6. ஆகவே, நம்முடைய மேன்மை பொருந்திய சிறிய தாழ்மையான மேய்ப்பர் சில நிமிடங்களுக்கு முன்னர் கூறினது... ஆம், இந்த வாரத்தில் இன்னும் சற்று அவருக்கு உதவும்படிக்கு கேட்க அவருக்கு விருப்பமில்லை . அவர் "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் மிகவும் களைப்புற்றுக் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்" என்றார். மேலும் அவர், "ஆனாலும், நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். என்ன, அது அருமையானதாகும். மேலுமாக, ஆஸ்திரேலியாவில், சிட்னியில் நடக்கவிருந்த கூட்டத்தை நான் இரத்து செய்ய வேண்டியதாயிற்று, இந்த சமயத்தில் அவர்கள் எனக்கு விசா அளிக்க மறுத்தனர். அதின் காரணத்தால் இரத்து செய்ய வேண்டியதாயிற்று (பாருங்கள்-?) இந்த சமயத்தில் நான் அமெரிக்காவை விட்டு பிரயாணம் பண்ணவும் மற்ற காரியங்களைச் செய்யவும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே, இந்த தருணத்தில் என்னால் அங்கே செல்ல முடியவில்லை. எப்பொழுது என்னால் அங்கே செல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை . ஆனால், கூடிய சீக்கிரத்தில் அங்கே செல்ல முடியும். ஆகவே, நாங்கள் அந்த கூட்ட ஏற்பாடுகளை சற்று மாற்றி அமைக்கையில், நான் இப்பொழுது சிக்காகோவிற்கு செல்கிறேன், வருகின்ற நாட்களில் சிக்காகோவில் நடக்கவிருக்கின்ற கூட்டத்திற்கு செல்கிறேன், அந்த கூட்டத்திற்கான விளம்பரத்தையும் நான் அந்த கூட்டத்தில் இருப்பேன் என்பதையும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். ஆனால், அது எனக்கு தெரியவில்லை, அந்த நேரத்தில் நான் அங்கே இருக்க வேண்டியதாக இருந்தது, பிஜி தீவுகளில் நான் இருக்கும்படியாக திட்டமிடப்பட்டிருந்தது, அங்கே அந்த தீவுகளில் நிறைய மக்கள் கூடயிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசா மறுக்கப்பட்டதின் காரணமாக இப்பொழுது அங்கே அந்த கூட்டத்தில் என்னால் பங்கு கொள்ள முடியாது. ஆகவே ... விரைவில் நான் . அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 7. இப்பொழுது, நான் சிக்காகோவில் இருப்பேன் ... ஜீன், கூட்டம் நடக்கவிருக்கின்ற தேதிகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா-? கூட்ட அறிவிப்புகளில் என்ன தெரியப்படுத்தப்பட்டது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா-? அது எப்பொழுது என்று எனக்குக்கூட தெரியவில்லை, சற்று முன்னர் தான் “ஹெரால்ட் ஆஃப் ஃபெய்த்” பத்திரிக்கையில் அதைப் பார்த்தேன். மாதத்தின் நான்காவது அல்லது ஐந்தாவது தேதியிலோ அல்லது இப்பொழுதிலிருந்து ஒரு வாரத்திற்கு பிறகோ , பத்து நாட்களில் கூட்டங்கள் துவங்குகின்றது என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் அதிகமான சிரத்தைக்குள்ளாக இருக்கின்றேன், ஆகவே, உங்கள் ஜெபங்களை நான் வாஞ்சிக்கின்றேன். 8. இப்பொழுது, இன்றிரவு, சில வேத வசனங்களை வாசிப்பதற்கென்று நான் எடுத்துவைத்திருக்கின்றேன். என்னோடு சேர்ந்து நீங்களும் வாசிக்க விரும்பினால், பரிசுத்த யோவான், 13-ஆம் அதிகாரத்தில், ஒரு பகுதியை வாசிக்கலாம். உங்கள் வேதாகமங்களை அருகிலே வைத்து நாங்கள் வாசிக்கையில் கூடவே நீங்கள் வாசிக்க விரும்புகிறவர்கள்.... இன்றிரவு ஆராதனை முடிவுற்ற உடனேயே, இங்கே ஒரு திருமண நிகழ்ச்சி ஒத்திகை பார்க்கப்பட இருக்கின்றது. ஆகவே, ஆராதனை முடிவுற்ற உடனே.... நாம் உடனடியாக வெளியே செல்வோம், மிக வேகமாக அல்ல, கட்டடம் காலியான உடனே அவர்கள் திருமண நிகழ்ச்சியை ஒத்திகை செய்து பார்க்க விரும்புகிறார்கள். நாளை இரவு இங்கே ஒரு திருமணம் நடக்கவிருக்கின்றது. இந்த கூடாரத்தில் ஐக்கியத்தில் இருக்கின்ற நம்முடைய இரண்டு பிள்ளைகளுக்கு நாளை இரவு விவாகம் ஆகப்போகிறது. உங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடியே, நம்முடைய அருமை சகோதரன்.டேவிட் உட் நாளை இரவில் மார்லின் ஜெ.ப். ப்ரீஸை கூடாரத்தில் ஆராதனைக்கு முன்னர் விவாகம் செய்யப் போகிறார். ஆகவே, அந்த திருமண நிகழ்விற்கான ஒத்திகை பார்த்தல் நடக்கவிருக்கிறது.... அது மிகவும் விதிமுறையின் படியல்ல, நாளை இரவிற்கான சாதாரண முறையான திருமணமாக அது இருக்கும். 9. இப்பொழுது, நாம் அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கு முன்பாக நாம் சற்று ஜெபிப்போம். பிதாவாகிய தேவனே, உம்முடைய பிரசன்னத்திற்கு முன்பாக எல்லாவற்றிற்கும் போதுமான இயேசுவின் நாமத்தை எங்கள் முன்னால் பிடித்துக் கொண்டு உம்முடைய பிரசன்னத்திற்குள்ளாக பயபக்தியுடனே நாங்கள் வருகின்றோம், நீர் எங்கள் ஜெபத்தைக் கேட்பீர் என்ற நிச்சயம் எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால், அவர் "என் நாமத்தினாலே பிதாவை எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று கூறியிருக்கின்றார். ஆகவே, கிறிஸ்தவ விசுவாசிகளாக, எங்கள் இருதயங்கள் எங்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்காதிருந்தால், அப்பொழுது எங்கள் விண்ணப்பங்கள் தேவனாலே பதிலளிக்கப்படும் என்பதை அறிந்தவர்களாக தைரியமாக கிருபாசனத் தண்டையில் நாங்கள் வருகின்றோம். எங்கள் தவறுகளை நாங்கள் அறிக்கையிடுவதின் மூலமாக எங்கள் ஜீவியங்களானது உமக்கு திருப்திகரமானதாக இருக்க நாங்கள் ஜெபிக்கின்றோம், மேலும் எங்களை மன்னிக்கும்படியான அவருடைய நீதிக்காகவும் மற்றும் இன்றிரவு எங்கள் வாஞ்சைகள் எல்லாமே நிறைவேறும்படிக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம். மேலும், கர்த்தாவே எங்களுடைய மகத்தான வாஞ்சை என்னவென்றால் உம்முடைய மகத்தான கிருபையானது எங்கள் மீது ஊற்றப்பட்டிருப்பதை நாங்கள் காண்பதேயாகும். அது தாமே எங்களுடைய பாவங்களை மன்னித்து எங்கள் மத்தியில் இருக்கின்ற வியாதி எல்லாம் சுகமாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஒரு வெளிப்பாடோ அல்லது தீர்க்கதரிசனத்தின் வழியிலோ அல்லது உம்முடைய சபைக்கு நீர் என்ன கூற விருப்பமாயிருக்கின்றீரோ அதைத் தாமே எங்களுடனே போவீராக எங்கள் இருதயங்கள் தாமே உம்முடைய ஆவி வந்து ஊற்றப்படும் பாத்திரங்களாக இருப்பதாக. இன்றிரவு நாங்கள் தாமே அந்த முக்கிய கம்பியுடன் இணைக்கப்பட்டு அதினாலே தானே பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் இருதயங்களுடனே பேசி அவருடைய பிரசன்னத்தினாலே மகிமையை பெற்றுக் கொள்ளட்டும். 10. இப்பொழுது, கர்த்தாவே, நாங்கள் எல்லா வியாதியஸ்தருக்கும் மற்றும் தேவையுள்ளோருக்கும் ஜெபிக்கின்றோம், இங்கு வருவதற்கு முன்னர் எங்கள் செயலர் என் மேஜைக்கு தேசமெங்கிலும் உள்ள அவதியுறுகிற, மரித்துக் கொண்டிருக்கிறவர்களின் நீண்ட பெயர் பட்டியலை கொண்டு வந்தார், மிகவும் மோசமான நிலையில் உள்ளோர் பெயர் சிகப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. அந்த பெயர் பட்டியலில் இருக்கின்ற ஒவ்வொரு பெயரின் மீதும் நான் என் விரலை வைக்கையில் ஓ தேவனே, இன்றிரவு இந்த சபையோருடன் கூட சேர்ந்து நானும் அந்த ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபையும் இரக்கத்தையும் அருளமன்றாடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் அறிவர், அவர்களுடைய தேவை என்னவென்பதையும் நீர் அறிவீர். அங்கே முதியோர் மற்றும் ஊனமுற்றோர் இல்லங்களில் இன்றிரவு தங்கி உடல் நலம் தேறிக்கொண்டிருக்கும் அவர்களையும், கர்த்தாவே, நாங்கள் மறக்க மாட்டோம். ஓ கர்த்தராகிய தேவனே, அவர்களில் அநேகர் உம்முடைய இரத்தத்தால் கழுவப்பட்ட பிள்ளைகளாவர். ஆகவே, ஓ, எங்களுக்கு வயதாகுகையில், எங்களுக்கு அருமையானவர்கள் எங்களை மறந்து போகையில் எங்களுக்கு ஒன்றே ஒன்று தான் ஆறுதலாயிருக்கிறது, அது தேவன் ஒரு போதும் மறக்கமாட்டார் என்பதே. எங்களுடைய எல்லா கிரியைகளும் ஜீவ புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய சமூகத்தில் அவை எல்லாமே என்றென்றுமாக இருக்கின்றது. ஆகவே, அவர்களுக்காக இன்றிரவும் நாங்கள் மன்றாடுகிறோம் கர்த்தாவே. எங்கள் தேசத்திற்காகவும் மற்றும் பாவம் செய்துக் கொண்டிருப்போருக்காகவும், தவறு செய்து கொண்டிருப்போருக்காகவும் மற்றும் மது அருந்தும் பார் அறைகளிலும் மற்றும் இன்றிரவில் பாவத்தின் பல பரிமாணங்களிலும் இருப்பவர்களுக்காக நாங்கள் இரக்கத்தை கேட்கின்றோம். கர்த்தாவே மன்னிக்கின்ற கிருபையை நாங்கள் கேட்கின்றோம். கர்த்தாவே எங்கள் இருதயங்கள் தாமே உமக்காக மிகவுமாக அன்பு நிறைந்ததாக காணப்படவும், எங்களுடைய உயரிய வாஞ்சியானது உமக்கு சேவை செய்வதே என்பதாகவும் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்களை நாங்கள் காணவும் நாங்கள் நிலையாக இருக்க நீர் தாமே எங்களை நிலைகுலையாமல் தாங்கி பிடிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம். வார்த்தை வாசிக்கப்படுதலையும் மற்றும் நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் நீர் ஆசீர்வதியும். தாழ்மையாக நாங்கள் எங்கள் தலைகளை தாழ்த்தி உமக்கு நன்றி செலுத்துகிறோம், இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 11. இப்பொழுது, பரிசுத்த யோவானின் புத்தகம், 13-ஆம் அதிகாரத்துக்கு திருப்புவோம். நாம் ஒரு பகுதியை வாசிப்போம்: பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டின பின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில். தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்கு போகிறதையும் இயேசு அறிந்து: போஜனத்தை விட்டெழுந்து வஸ்திரங்களைக் கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர், சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: "நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” என்றார். கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை தம்முடைய வார்த்தை வாசிக்கப்படுதலினோடே கூட்டுவாராக. இன்றிரவு சிறிது நேரத்திற்கு ஒரு தலைப்பின் பேரில் பேச விரும்புகிறேன். கிறிஸ்துவின் சாயல்கள்” என்ற தலைப்பின் பேரில். நான் இதின் பொருளாக வைக்க விரும்புவது: என்ன தேவை... ஒரு கிறிஸ்தவனாக ஆவதற்கு தேவைப்படுகிறது என்னவாயிருக்கிறது-? 12. இப்பொழுது, பார்க்கபோனால் இது ஒரு சுவிசேஷ பிரசங்க தலைப்பு என கூறப்படுவதற்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், இன்னுமாக இது ஒரு சுவிசேஷ பிரசங்கத்தின் தலைப்பே ஆகும், ஏனென்றால் சபை எந்த காரியங்களின் பேரில் முன்னே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது என்பதை அறியும் வரைக்குமாக அதினாலே முன்னே செல்ல முடியாது. மேலும், நான் நம்புவது என்னவென்றால் ஒருவர் முன்னே போகவோ அல்லது உண்மையான அசையா நம்பிக்கை நிறைந்த விசுவாசத்தை கொண்டிருப்பதற்கு முன்னர், முதலாவதாக தங்கள் நிலைப்பாடு என்னவென்றும், தங்கள் நிலைப்பாட்டை எடுக்கும் போது எப்படியாக தங்கள் நிலைப்பாட்டில் நிற்க வேண்டும் என்பதையும், அவர்கள் அறிந்தாக வேண்டும் என்றே நான் நம்புகிறேன். அது அத்தியாவசியமான ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எதில் குதிக்கின்றீர்கள் என்பதை அறியாதவர்களாக, ஏதோ அறியாத ஒன்றில் விசுவாசத்தைக் கொண்டு உங்களால் தலைக்குப்புற குதிக்க முடியாது. நீங்கள் அதை அறிந்தாக வேண்டும். ஆகவே, நம்முடைய விசுவாசமானது சரியாக அமைக்கப்பட்டு சரியான இடத்தில் நிலைப்படுத்தப்பட்டிருக்குமானால், அப்பொழுது அது தொடர்ச்சியான திருப்தியை அளிக்கும். 13. ஒரு பெண்ணைக் குறித்து கூறப்படுவது போன்று, ஒருக்கால் அது அவள் திருமணம் ஆனபிறகு, அவள் அறிந்திராத - தன்னுடைய முதல் குழந்தையை அரவணைக்க வேண்டும் என மிகவும் ஆவலாக இருப்பாளானால் - அவள் காத்திருக்கலாம். ஆனால் அவள் ... அவளுடைய எதிர்பார்ப்புகள் எப்படியாக இருக்கிறதென்றால், அதற்கு பின்னால் அது சீக்கிரமாக சம்பவிக்கவில்லை என்றால் அவள் தன்னுடைய குழந்தையை பெற்றுக்கொள்ள மாட்டாள் என்கின்ற பயமானது இருக்கின்றது. அப்பொழுது அது அவளை எல்லா நேரத்திலும் இன்னுமாக தூர கொண்டு சென்று விடுகின்றது. இப்பொழுது, இந்த நாட்களில் அந்த இழப்பை ஈடு செய்கின்ற ஒரு காரியத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அது எல்லா காலங்களிலும் செய்யப்பட்டது. அந்த பெண் தான் இந்த குழந்தையை பெற்றெடுக்கப் போவதில்லை என்று கண்டாலோ அல்லது நம்பினாலோ, அவள் புறப்பட்டுச் சென்று ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்வாள், பிறகு நடப்பது என்ன என்று தெரியுமா, அவள் தன் சொந்த குழந்தையை பெற்றுக்கொள்வாள். இப்பொழுது, அது பத்தில் ஒன்பது முறை சரியானது என்று அது நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால், "ஓ, ஒருக்கால் நான் அதை பெற்றுக் கொள்ளமாட்டேன்” என்று யோசித்துக் கொண்டேயிருப்பதினால் உண்டாகும் மன அழுத்தமானது அப்படி செய்கின்றது. ஆகவே, குழந்தை தத்து எடுப்பது ஒரு சிறு திருப்தியை உண்டாக்கும். அது ஒருக்கால் அவளுடைய மனநிலையை சரியான ஒரு நிலைக்கு கொண்டுவர தேவன் கொண்டிருக்கும் ஒரு வழியாகவும் கூட அது இருக்கலாம். அதன் பிறகு, அவள் தன் சொந்த குழந்தையை பெற்றெடுப்பாள். ஏனென்றால், அந்த பயம் மற்றும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆவலானது முடிவில் அவளை விட்டுச் சென்றிருக்கும். 14. வியாதியிலிருந்து சுகமாக்கப்பட விரும்பும் மக்களிடமும் கூட அதே விதமாகத்தான் இருக்கின்றது. அவர்கள் .... அவர்கள் தாமே காணப்படக் கூடிய ஒரு சிறு அறிகுறியை கொண்டிருப்பார்களானால், எலியாவைப் போல, அவன் கூறினது... கேயாசி கூறினது போல, “மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகத்தை என்னால் காணமுடிகிறது” என்று கூறினான். "பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது” என்று எலியா கூறுகிறான். அவன் அதன் அத்தாட்சியை, அறிகுறியைக் கண்டான். அதன் காரணமாகத் தான் அநேக சமயங்களில் நான் மக்களிடமாக, "புறப்பட்டுச் செல்லுங்கள். கர்த்தரை ஸ்தோத்தரிக்க ஆரம்பியுங்கள்” என்று கூறுவதுண்டு. பாருங்கள், ஏனென்றால் அதுதான் தத்தெடுக்கப்பட்ட குழந்தையாகும். காரியம் என்னவென்றால் அவர்களுடைய அறிவுப்பூர்வமான பகுதியில் அக்கருத்து ஆரம்பித்து தாங்கள் சுகமாக்கப்பட்டோம் என்று தங்கள் ஆத்துமாவுக்குள்ளாக அது வந்து விடுகின்றது. பிறகு விசுவாசமானது அதைச் சரிப்படுத்துகின்றது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் செய்கின்ற காரியத்திலே உங்களுக்கு பற்றுறுதி, நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியமாகும். 15. ஆதலால், "ஓ, ஒரு கிறிஸ்தவன் என்றால் என்ன-?” என்று கூறப்படுவதை நாம் அநேக சமயங்களில் கேட்டிருக்கிறோம். சில மக்கள் அது சபையில் சேருவது மாத்திரமே என்ற விதமாக சித்தரித்து நிறுத்தி விடுகின்றனர். ஒருவர், "சரி, ஒரு கிறிஸ்தவன் என்றால் சபையுடன் தன்னை இணைத்துக் கொள்கின்ற ஒரு சபை அங்கத்தினன் தான்” என்று கூறினார். எல்லா கிறிஸ்தவர்களும் அவ்விதம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அது தான் கிறிஸ்தவம் என்று நான் விசுவாசிப்பதில்லை. பாருங்கள்-? ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்தவனாக ஆனபின்பு அதைத் தான் செய்கின்றான். ஆனால், அவ்விதமாகச் செய்கிறான் என்பதால் தான் அவனை அது கிறிஸ்தவனாகச் செய்கிறது என்பதும் அல்ல. மேலும் சிலர், “இல்லை, அது சபைக்குச் சென்று போதகமாக அறிவிக்கப்படுகின்ற கோட்பாடுகளுக்கு ஊழியம் செய்து சபை போதிக்கின்ற காரியங்களுக்கு உத்தமமாக இருப்பதேயாகும்” என்று கூறுகின்றனர். இன்னுமாக ஒரு சிலர் ஒரு சிறு சிலுவையை அல்லது ஏதோ ஒன்றை தங்கள் மேல் வைத்துக் கொண்டிருப்பது தான் கிறிஸ்தவனின் அடையாளம் என்று கூறுகின்ற வேறு சில மக்கள் இருக்கின்றனர். ஆம்..... ஒரு மெழுகுவர்த்தியை எரிய வைப்பதோ அல்லது ஒருவிதமான தவத்தைச் செய்பவன் தான் ஒரு கிறிஸ்தவன் ஆவான் என்று நம்புகின்ற ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் வெறுமனே தண்ணீரில் அமிழ்த்தப்பட்டோ அல்லது ஏதோ ஒரு பலியை செலுத்தியோ அல்லது சபைக்கு சில நல்ல காரியங்களை அளிப்பதோ அல்லது பக்கத்து வீட்டாருக்கு உதவி செய்வது, ஒரு விதவைக்கு அடுப்பு எரிய நிலக்கரி வாங்கித் தருவது அல்லது அனாதைகளுக்கு காலணிகள் வாங்கித் தருவது .... அவை ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டிய காரியங்களாகும். ஆனாலும், அது இன்னுமாக அவனை ஒரு கிறிஸ்தவனாக்காது. 16. இன்னும் சிலர் சொல்வது என்னவென்றால் கிறிஸ்துவின் படத்தை உங்கள் காரிலோ அல்லது உங்கள் வீட்டுச் சுவற்றிலோ தொங்க விடுவது தான் ஒரு கிறிஸ்தவனின் அடையாளம் என்கின்றனர். சரி, அவை எல்லாம் சரி தான், ஆனால், ஒரு படத்தை வைப்பது தான் உங்களை ஒரு கிறிஸ்தவனாக்குகிறது என்பதை நான் விசுவாசிப்பதில்லை. கிறிஸ்துவின் சாயலாக இருப்பது தான் உங்களை ஒரு கிறிஸ்தவனாக்குகிறது என்று நான் நம்புகிறேன் . வெளிப்புறமாக நாம் செய்கின்றது அல்ல. ஆனால், நமக்குள்ளாக ஒன்று சம்பவித்து அது நம்மை என்னவாகச் செய்கின்றது என்பது தான் காரியமாகும். ஆதலால், அவர் நம்முடைய சாயலாக இருந்து நாமும் அவருடைய சாயலில் இருந்து அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக இருப்போமானால், நாம் அவரைப் போன்றதான சாயல்களில் இருந்தாக வேண்டும். அப்பொழுது நம்முடைய ஜீவியங்கள் கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிக்க வேண்டும். நாம் சபையில் சேர்ந்து கொள்ளுதலினால் அல்ல, அல்லது ஒரு சிலுவையை தோளின் மீது சுமப்பதினால் அல்ல, நம்முடைய உணர்ச்சி வசத்தினால் அல்ல, ஆனால், அது ஜீவனுள்ள தேவனின் ஜீவிக்கின்ற பிரசன்னமானது நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலித்துக் காண்பிக்கப்படுதலே ஆகும். 17. தங்கம் உருக்கப்படுவதற்கு முந்தைய காலங்களில், தங்கத்திலிருந்து உலோகக்கழிவை வெளியே எடுக்க இரும்பையும் கந்தகக் கல்லையும் கொண்டு செய்வார்கள் என்று அதிகாரிகள் என்னிடமாகக் கூறினார்கள். அந்த கந்தகக்கல் ஏறக்குறைய உண்மையான தங்கத்தைப் போலவே இருக்கும், அதை முட்டாள்களின் தங்கம் என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு உண்மையானதைப் போலவே இருக்கின்றது. ஆகவே, தங்கத்திலிருந்து உலோகக் கழிவுகளை எப்படி எடுப்பார்கள் என்றால், அதை ஒரு சுத்தியலைக் கொண்டு அடிப்பார்கள். இந்தியர்கள் அவ்விதமாக செய்வது வழக்கம். அந்த தங்கத்தை முன்னும் பின்னுமாக திருப்பி அதை சுத்தியலைக் கொண்டு அடித்து அதிலிருக்கின்ற கழிவுகள் முழுவதுமாக அகற்றப்படும் வரைக்குமாக சுத்தியலைக் கொண்டு அடிப்பார்கள். அப்படியாக அடித்து கழிவுகளை நீக்கின பின்பு தங்கம் தென்படும், அதை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்றால் தங்கத்தை சுத்தியலைக் கொண்டு அடிப்பவன் தன்னுடைய சாயல் அதிலே பிரதிபலிக்கப்படும் போது தங்கம் வெளியே தெரிகின்றது என்று கண்டறிவார்கள். அந்த தங்கத்தை சுத்தியலைக் கொண்டு தொடர்ந்து அடிப்பவன் தன்னுடைய சொந்த சாயல் பிரதிபலிக்கப்பட்டு அதைக் கொண்டு தன்னுடைய முகத்தை சவரன் செய்து கொள்ளுகின்ற அளவிற்கு தன்னுடைய சாயலை அந்த தங்கத்தில் பார்ப்பான். அதே போல தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் சுவிசேஷ சுத்தியலைக் கொண்டு அடிக்க ஆரம்பித்து உலகத்தின் எல்லா காரியங்களையும் எடுத்து வெளியே போடும் வரைக்குமாக அடித்து தேவனாகிய கர்த்தரின் சாயலை நாம் பிரதிபலிக்கும் வரைக்குமாக அப்படி செய்வார். அப்பொழுது நாம் கிறிஸ்தவர்கள் ஆவோம் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், "கிறிஸ்தவன்" என்கின்ற வார்த்தைக்கு "கிறிஸ்துவைப்போல்" என்று அர்த்தமாகும். அது அவரைப் பிரதிபலிப்பது என்பதாகும். 18. இப்பொழுது, அப்படியானால், ஓவியர்கள் அவரை வரைந்துள்ள விதத்தில் நாம் ஒரு நீண்ட தாடியை வளர்க்க வேண்டும் என்பதாக அல்ல. அவர் நீண்ட மயிர் உடையவராக ஓவியர் சித்தரித்துள்ளது போல நாமும் நீண்ட தலை மயிரை வளரச் செய்ய வேண்டும் என்பதாகவோ அல்லது, அவர் அணிந்த விதமாக நீண்ட ஆடையை அணிய வேண்டும் என்பதாகவோ இல்லை, ஏனென்றால் நாம் வேறோரு நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருடைய சரீரப் பிரகாரமான சாயலை பிரதிபலிக்க அவைகளை வைத்திருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால், நாம் அவருடைய ஆவியின் சாயலையும் அவருடைய ஜீவியத்தின் காரியத்தையும் நம்முடைய ஆத்துமாக்களில் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் என்றால் கோட்பாடுகளோ அல்லது சபைகளில் அங்கத்தினர்களாக சேர்வது தான் என்பதை நான் விசுவாசிப்பதில்லை. அது ஒரு மானிடனில் இயேசுகிறிஸ்துவின் பிரதிபலிப்பே என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால், நாம் அவருடைய அங்கத்தினர்கள் . அவருடைய சரீரத்தின் அவயங்களாக இருக்கின்றோம். ஆகவே, நாம் அவருடைய சாயலை தரித்திருக்கிறோம் என்று வேதாகமம் கூறுகின்றது. இப்பொழுது அவர் எந்த விதமான ஒரு சாயலை உடைவாக இருக்கின்றார்-? அவர் ஏதோ ஒரு மகத்தானவர் என்பதாக இருக்க அவர் வரவில்லை . ஆனாலும், அவர் மகத்தானவர் தான், ஆனாலும் அவர் ஒரு ஊழியக்காரராக வந்தார். அவர் ஊழியம் கொள்ள வரவில்லை . ஆனால், அழியம் செய்யும்படிக்கு வந்தார். இன்றிரவிற்கான நம்முடைய பொருள் அவர் என்னவாக இருந்தார் என்பதை பலப்படுத்துகின்றது. என்னுடைய மதிப்பீட்டின்படி அது அவரை மகத்துவமானவராகச் செய்கின்றது. ஆம், நித்தியத்தின் தேவனாக இருக்கையில், வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த அந்த அதே தேவன் தாமே, இங்கே கீழே வரும்போது, அவர் மிகவும் தாழ்ந்த ஒரு நிலையை எடுத்துக் கொண்டார். எந்த ஒரு நபரும் கொண்டிராத, மிகவும் வேண்டாத ஒரு வேலையாகிய கால் கழுவும் வேலையாளின் பணியை எடுத்துக்கொண்டார். 19. கிழக்கத்திய உலகத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த எல்லா சம்பவங்களில் கால் கழுவும் பணியாளனுக்கு தான் மிகவும் குறைந்த அளவே சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. ஏனென்றால், அந்த நாட்களிலே மிருகங்கள் அங்கே நெடுஞ்சாலைகளிலும் மற்றும் அதிலிருந்து புறப்பட்ட சிறு புற வழிகளிலேயும் நடந்து சென்றன. ஆகவே, பாதையில் மிருகங்கள் சென்றதனால் சாலை முழுவதுமாக நாற்றமெடுத்தது. மேலும், அதிலிருந்து புழுதி கிளம்பி நடந்து சென்றவர்களின் பாதங்களில் படிந்தது. ஆதலால், மிக மோசமான ஒரு துர்நாற்றம் வீசினது. ஆகவே, ஒருவன் மற்றொருவனை சந்திக்க வரும் போது, அவனால் அப்படியான துர்நாற்ற நிலையில் சந்திக்க நேரடியாக முடியாது. சாலையின் துர்நாற்றமும் தூசியும் அவன் பாதங்களில் படிந்திருந்ததால் மிகவும் துர்நாற்றம் வீசியது. குதிரை கட்டி வைக்கப்படும் தொழுவத்தில் உள்ள துர்நாற்றம் போல இருக்கும். ஆகவே, அவன் செய்த முதல் காரியம் என்னவென்றால், அவன் ஒரு சிறு சாவடியை வைத்திருப்பான், எல்லாரையும் வரவேற்கின்ற ஒரு சாவடி. அந்த இடத்திலே மிகவும் குறைந்த சம்பளத்தை பெற்ற ஒரு மனிதன், ஒரு அடிமையைப் போன்று, வருகின்ற விருந்தாளியின் பாதங்களை கழுவி அணிந்து கொள்ள அவனுக்கு வேறொரு காலணியை கொடுத்து, சிறு பாதரட்சைகளை அவனுக்கு அணிவிக்க ஒரு மனிதன் அங்கே இருந்தான். அதன் பிறகு..... தைலத்தைக் கொண்டு.... பிறகு அந்த மனிதன் தன்னுடைய நண்பனின் விருந்தாளியாக பிரவேசிக்கலாம். ஏனென்றால் அந்த இடத்திற்கு வரும் போது அவன் சாலையின் நாற்றத்தாலும், வியர்வையினாலும் இன்னுமாக மிகவுமாக துர்நாற்றம் மிக்கவனாக இருந்து தர்மசங்கடத்தில் இருப்பான். ஆகவே, அங்கிருந்த அந்த கால் கழுவும் பணியாளனுக்கு அங்கே இருந்த மனிதர்களிலேயே மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. ஆகவே, பரலோகத்தின் தேவன் தாமே தம்மை அவ்விதமாகத் தாழ்த்தினார் .... இருந்ததிலேயே மகத்தானவர் தாமே அங்கே இருந்ததிலேயே மிகவும் தாழ்ந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டு அதைச் செய்தார். 20. இன்றைக்கு கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கிறவன் என்று அழைத்துக் கொள்கின்ற ஒரு கிறிஸ்தவனிடமாக எப்படிப்பட்டதான ஒரு வித்தியாசம் காணப்படுகிறது என்று பாருங்கள். எப்பேர்ப்பட்ட ஒரு வித்தியாசம். ஏன், இன்று கிறிஸ்தவன் என்று அழைக்கப்படுகின்ற ஒருவன் ஊழியம் கொள்ளவே விரும்புகிறான். ஓ, தான் ஒரு மேன்மையானவன் என்று அவன் நினைக்க ஆரம்பிக்கின்றான். இயேசுவுக்கும் இன்றைய கிறிஸ்தவனுக்கும் எப்படிப்பட்டதான ஒரு வித்தியாசம்..... அவரை பிரதிபலித்தல். இயேசு ஊழியம் கொள்ள வரவில்லை , ஆனால், அவர் ஊழியம் செய்யும்படிக்கே வந்தார். "உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாய் இருக்கக்கடவன்”. ஆகவே, இன்று நாம் காண்பது என்னவென்றால், நம்முடைய கிறிஸ்தவத்தின் நவீன போக்கு என்னவென்றால் நான் பெரியவன். நீ ஒன்றுமற்றவன்” என்பதேயாகும். ஓ, அது ஒரு... அது தவறாகும். அது அந்த விதமாக இருக்கக்கூடாது. நாம் கிறிஸ்தவத்தை தவறான விதத்தில் பிரதிபலித்துக் காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அந்த விதத்தில் பிரதிபலித்துக் காட்ட நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அந்த விதத்தில் நாம் அதை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை . அவர்... நாம் "இயேசுவைப் போல இருத்தல்” என்று பாடுகிறோம். ஆனால், நம்முடைய பெருமையை தாழ்மைப்படுத்தும் நிலைக்கு வருகையில், அவர் செய்த விதமாக நாமும் தாழ்த்த வேண்டிய நிலை வரும் போது, அப்பொழுது நாம் ஒரு எல்லையை நமக்கு வரைந்து கொள்கிறோம். அப்படிச் செய்வதால் மனிதன் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டான். அதினாலே அவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொள்ளலாம் என்பதற்காக. ஆனால் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் இருக்கிறதினால் தான் அப்படி செய்கிறார்கள். வேத வசனம் கூறுவது போலவே, அவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொள்ளுகிறார்கள். "நாங்கள் ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றோம். அது ஒரு பெரிய சபையாகும். அது சிறந்த ஒரு சபையாகும். எங்கள் ஸ்தாபனமானது ஒரு பெரிய ஸ்தாபனமாகும்." அது இயேசுவைப் போல் செயல்படுவது அல்ல. அது அவருடைய அன்பையும் அவருடைய சொந்த சிறப்பு பண்பை பிரதிபலிப்பதில்லை. அவர் இருப்பதிலேயே மிகவும் கீழான நிலையில் இருந்தவரிடம் வந்தார். ஒரு தெரு வேசியிடம், ஒரு பிச்சைக்காரனிடம், பயனற்றவரிடமாக வந்தார். அவர்களுடன் சேர்ந்து அவரும் தூசியில் இருந்தார். அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையாகும். அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும் - அந்த விதமாகத் தான் அவர் பிரதிபலிக்கப்பட்டு காண்பிக்கப்பட வேண்டும். 21. ஓ, மக்கள் இவ்விதமாக, "அது என்னவென்றால் அந்த.... அந்த நாட்கள் கடந்து விட்டன” என்று கூறுவது எனக்குத் தெரியும். அது அவ்வாறல்ல. கிறிஸ்து, இன்னுமாக கிறிஸ்துவாக இருப்பாரானால், அவருக்குள்ளே இருந்த அவருடைய ஆவியானது இன்னுமாக உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியாக இருக்குமானால், அது தாமே உங்களையும் அந்த ஸ்தானத்தை, நிலையை எடுக்கச் செய்யும். ஆனால், இன்றோ, நாம் வித்தியாசப்பட்டவர்கள் என்று நினைக்க முனைகின்றோம். நாம் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினாலே நாம் அவருடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்று அவர் ஜெபித்த ஜெபத்திலிருந்து அக்கருத்து எவ்வளவு தூரமாக அகன்றுள்ளது பாருங்கள். ஆனால், நாமோ அவ்வாறு செய்வதற்கு பதிலாக அற்ப காரியத்தின் பேரில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். சில குறிப்பிட்ட காரியங்களின் பேரில் நாம் இணங்காமற்போவதினால் நாம் ஒருவரையொருவர் வெறுக்கின்றோம். நாம் புறப்பட்டுச் சென்று மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறோம். பாருங்கள், நாம் .... ஆனாலும் இன்னுமாக நாம் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரிக் கொள்ளுகிறோம். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் என்று உரிமைகோரிக்கொள்ளும் மக்கள் தாம் இவ்வித காரியங்களின் பேரில் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், அவர்கள் புறப்பட்டுச் சென்று மற்ற கிறிஸ்தவர்களைக் குறித்து தீமையான காரியங்களை அதிகமாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட காரியங்களை அவர்கள் செய்யக்கூடாது என்பதாக இருக்க, அவர்கள் அப்படியாக செய்கின்றனர். 22. இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, அந்த விதமான ஒரு ஆவியை நாம் உடையவர்களாக இருப்போமானால், நாம் இன்னுமாக கிறிஸ்தவர்களாக இல்லை என்பதான காரியத்தை நம்முடைய சிந்தையில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் எவ்வளவாக அறிக்கை இட்டாலும் சரி, நாம் எதைக் கொண்டிருக்கிறோமா அதுதான் காரியத்தை நிலைநிறுத்துவதாக இருக்கின்றது. எல்லா மக்களையும் நேசிக்காமல் நம்மால் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. நாம் மக்களிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், இயேசுவோ , "இதோ பாருங்கள், பரிசேயர்களாகிய நீங்கள் எல்லாரும் சற்று கவனியுங்கள், நீங்கள் எல்லாரும் பாதாளத்துக்கு செல்லப்போகிறீர்கள், உங்களுக்கு வாய்ப்பேயில்லை, ஏனென்றால் இந்த, அந்த மற்றும் வேறே கருத்தினால் தான், நீங்கள் பரிசேயர்களாக இருப்பதினாலே உங்களுக்கு வாய்ப்பேயில்லை” என்பதன் கருத்தினை பதிவு செய்து கூறவில்லை. ஆனால், அவரோ அவர்களிடமாக சென்றார், அவர்களிடமாக ஊழியம் செய்தார். அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களுக்கு எந்த விதத்திலெல்லாம் உதவி செய்ய முடியுமோ அந்த விதத்திலெல்லாம் எல்லா உதவிகளையும் அவர்களுக்கு அவர் செய்தார். ஆனால், இன்றைக்கோ கல்வியறிவு, சபை அங்கத்தினராகுதல் மற்றும் உலகத்தில் பிணைக்கப்படுதலானது ஆவிக்குரிய இடத்தை கல்வி அறிவு எடுத்துக்கொள்கின்ற விதத்தில் சபையை ஒன்று சேர்த்துள்ளது. ஆவியானவரைக் கொண்டுதான் தேவனிடமாக செல்லமுடியுமே தவிர மற்ற விதத்தில் உங்களால் முடியவே முடியாது. மனிதன் தேவனிடமாக வருவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது, அது பரிசுத்த ஆவியின் மூலமாகத்தான், "முதலாவதாக பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு கூறினார். கிறிஸ்தவர்களே, அது உண்மையாகவே அப்படியாகவே தான் இருந்து வருகின்றது. நாம் ஒரு சிறு நோட்டு புத்தகத்தை இன்றிரவு நம் இருதயத்திற்குள்ளாக எடுத்துக் கொண்டு இந்த காரியங்களை இப்பொழுது நாம் எடுத்துக் கொள்வோமாக. 23. இதைக் குறித்து நாம் சற்று சிந்திப்போமாக. ஓ, எல்லாவற்றைக் குறித்த அறிவானது எங்களிடம் உள்ளது என்று நம்மில் சிலர் கூறிக்கொள்கின்றனர். "இதோ சற்று பொறு...” என்று கூறுகின்றவர் நம்மிடையே இருக்கின்றனர். அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்றும் பரிசுத்த பிதாக்கள் என்னும் விதத்தில் இருக்க அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். இவை எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் இவற்றைக் குறித்த சகல அறிவையும் அறிந்திருந்தாலும், அது உங்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யாது. "நான் சகல அறிவையும் அறிந்திருந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை" என்று வேதாகமம் கூறுகின்றது. ஆனால், அந்த விதமான ஒரு எழுப்புதல் கூட்டத்துக்கு நான் செல்லமாட்டேன், ஏனென்றால் அவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் அல்ல. அவர்களுடன் நான் எந்தவித தொடர்பும் கொள்ள மாட்டேன்" என்று ஒருவர் கூறுவாரானால், அப்படியென்றால் நாம் கொண்டிருகின்ற சகல அறிவும் என்ன நன்மை பயக்கும். அவர்களுக்கு மொழியின் அச்சாரமாகிய ABC கூட தெரிந்தோ அல்லது தெரியாமலோ இருக்கலாம், ஆனால் அவர்களால் கிறிஸ்துவை அறிந்து கொள்ள முடியும். நிச்சயமாக. உங்களால் மிகவுமாக கீழான ஒரு நிலைக்கு செல்ல முடியாது. தேவன் தாமே அந்த ஆவியை எனக்குள்ளாக எப்பொழுதுமே வைத்திருப்பாராக. காரியம் எப்படி இருந்தாலும் சரி, கீழானதாக இருந்தாலும் சரி. அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்களோ, எதை அவர்கள் விசுவாசியாமல் இருக்கிறார்களோ சரி, எந்த கோட்பாடு, இன நிறம் அல்லது என்னவாயிருந்தாலும் சரி, நான் அவனுக்கு உதவிக்கரத்தை நீட்டவே விரும்புகிறேன். நிச்சயமாக. அந்த ஆவி எனக்குள்ளாக இருக்க நான் விரும்புகிறேன். நான் மற்றவனைக் காட்டிலும் சிறந்தவன் என்று நினைக்க மாட்டேன். நான் என் நெஞ்சை முந்தி தள்ளிக் கொண்டு "நான் உள்ளே வரும் போது எல்லா மக்களும் எழுந்து நிற்கின்றனர்" என்றோ அல்லது, அவர்களைக் காட்டிலும் நான் மிகப் பெரிய எழுப்புதல் கூட்டத்தை நடத்தினேன்" என்றோ கூறலாம். ஆனாலும் தேவன் உண்டாக்கின களிமண்ணே தவிர வேறெதுவாக நான் இருக்க முடியும்-? நான் தானே என்னை தாழ்த்தி கொள்ளட்டும், அதினாலே அவருடைய ஜீவனானது பிரதிபலிக்கப்படட்டும். எல்லா கிறிஸ்தவர்களும் அவ்விதமாகவே சிந்திப்பார்களாக. அறிவானது நம்மை ஒன்றுமே இல்லாத ஒரு நிலைக்கு கொண்டு செல்லும். 24. உதாரணத்திற்கு, ஒரு கூண்டு முழுவதுமாக மஞ்சள் நிறம் கொண்ட பாடும் வகைப்பறவையான கானரிப் பறவைகள் (Canary) இருந்தது, அந்த கூண்டானது இந்த கூடாரத்தின் அளவிற்கு இருந்தது. அதிலிருந்த ஒரு பறவை கூண்டில் மேலே பறந்து சென்று "இதோ பாருங்கள், நான் உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நான் உங்கள் எல்லாரையும்விட மேலான நிலையின் உள்ள ஒரு பறவை. பாருங்கள், மானிடரைக் குறித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துள்ள ஒரு மஞ்சள் பறவை ஆவேன் . ஓ, என்னால் அதை விவரமாக விளக்க முடியும். அந்த பெண்மணி இந்த வீட்டின் உள்ளும் புறமும் நடந்து சென்றதை நான் பார்த்திருக்கிறேன், பிள்ளை விளையாடினதை நான் பார்த்திருக்கிறேன். அதை குறித்து எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, நீங்கள் எல்லாரும் நான் சொல்வதை சற்றுக் கேளுங்கள்" என்று கூறுகின்றது. அந்த பறவை தன்னுடைய சிறு மூளையை உபயோகித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த கல்லூரி கல்வி பயின்ற ஒரு மனிதன் மெருகேற்றப்பட்ட இலக்கண அறிவினாலே நிறைந்தவனாக உள்ளே வருகின்றான். அவன் தான் பெற்றிருந்த சிறந்த இலக்கண நடையை உபயோகித்து அந்த சிறிய பறவையுடன் பேச ஆரம்பிக்கின்றான், தன்னால் முடிந்த அளவிற்கு மிகவும் இலக்கண நடைவாய்ந்த தொன்மையான மொழியைக் கொண்டு இந்த சிறு பறவையுடன் பேசினான். அப்பொழுது அந்த சிறு பறவை தன் தலையை இங்குமங்குமாக பக்கவாட்டில் திருப்பிக் கொண்டே இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது; அந்த பறவை தன் தலையை இப்படி அப்படியாக திருப்பி திருப்பி அந்த மனிதன் பேசிக் கொண்டிருந்ததை உற்றுக் கேட்டது. ஆனால், அந்த மனிதன் எதைக் குறித்து பேசினான் என்பது எதுவுமே இந்த பறவைக்கு சிறிதும் கூட புரியவே இல்லை . ஆனாலும், அந்த மனிதன் பேசுவது இந்த பறவைக்கு கேட்டது, அவனைக் காணவும் முடிந்தது. ஆனால், அவன் கொண்டிருந்த அறிவானது எதற்காவது உபயோகப்பட்டதா-? ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால், அந்த மனிதன் எதைக் குறித்து பேசினான் என்று இந்த பறவைக்கு புரியவேயில்லை. ஏன்-? அந்த பறவைக்கு கானரி பறவைக்கு உண்டான மூளை மாத்திரமே இருந்தது. அதற்கு மனித மூளை இருக்கவில்லை . கானரி பறவைகள் புரிந்து கொள்ளும் விதமாகத்தான் இந்த பறவையும் அப்படியான புரிந்து கொள்ளுதலையுடையதாக இருக்கும். 25. அந்த விதமாகவே மனிதனும் கூட இருக்கின்றான். நீங்கள் எவ்வளவாக அறிவுக்கூர்மை கொண்டவர்களாக இருந்தாலும் கூட அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை, நாம் இன்னுமாக கானரிப் பறவை மூளையைத் தான் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் மானிட பிறவிகள் மாத்திரமே. ஆவியினாலும், பரிசுத்த ஆவியினாலே உண்டாகும் வெளிப்பாட்டின் மூலமாகத் தான் தேவன் அறியப்படுகின்றார். நாம் தேவனை அறிவுப்பூர்வமான காரியங்களைக் கொண்டு புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் பேசலாம் - அறிவுப் பூர்வமான விதத்தில் கூட்டங்களில் பேசலாம், உளவியல் கூற்றை உபயோகித்து உங்களால் கூடுமான வரைக்கும் பேசலாம், ஆனாலும், ஜனங்கள் தேவனை அறிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களால் முடியாது. கண்ணீர் விட்டழுது தங்கள் கன்னங்களை திருப்புகின்ற மக்கள் பழமை கால பாணியிலானவர்கள் என்று நீங்கள் கூறி விவரிக்கலாம். ஆனால், கிறிஸ்துவை தன்னுடைய ஜீவியத்தில் பிரதிபலிக்கின்ற ஒரு மனிதனானவன், தாழ்மையுள்ள ஒரு மனிதனாக இருக்கின்றான். தேவனோடு நடக்கின்ற ஒரு மனிதன் இயேசுவைப் போலவே நடந்து கொள்வான். 26. ஆனால், சற்று கவனியுங்கள், அந்த சிறு பறவையினால் புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும், தனக்கு புரிந்து கொள்ள முடியும் என்று அது நினைத்துக் கொண்டது. ஏனென்றால், அது அவ்விதமாக உண்டாக்கப்படவில்லை. அப்பறவையின் அறிவானது இந்த புத்தி கூர்மை கொண்ட கல்லூரி படிப்பை பெற்ற மனிதனின் அறிவாற்றலுடனே பொருத்திப் பார்க்கப்படவே முடியாது. அதே போலத்தான் நம்முடைய அறிவுத்திறனானது தேவனுடனே பொருத்திப் பார்க்கப்பட முடியவே முடியாது. எப்படியாக நம்முடைய சிறு முடிவில்லா சிந்தையானது முடிவு கொண்ட சிந்தையுடனே பொருந்தும் - அப்படி நான் கூற வரவில்லை , நம்முடைய முடிவு கொண்ட சிந்தையானது தேவனுடைய முடிவுற்ற சிந்தையுடன் எப்படியாகப் பொருந்தும், ஒத்துப் பார்க்கப்பட முடியும். தேவனுடைய முடிவில்லாத சிந்தையானது மானிட அறிவாற்றல் திறத்தைக் காட்டிலும் மிகவும் அப்பாற்ப்பட்ட நிலையில் இருக்கின்றது, அதற்கு ஒப்பிடப் படுகையில் மானிட அறிவாற்றலானது இல்லாமல் மறைந்தே போய்விடும். அந்த மனிதன் என்ன பேசுகின்றான் என்பதை அந்த பறவை அறிந்து கொள்ள இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால் அது தன்னைத் தானே ஒப்புவித்து, அதை ஏற்றுக்கொண்டு, அந்த மனிதன் தன்னை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றானோ அதை செய்வதே தான். 27. நாம் தேவனை அறிந்து கொள்ள நமக்கு இருக்கின்ற ஒரே வழி என்ன என்றால் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை பின்பற்றுவது மாத்திரமே. அது பழமை பாணியான ஒன்றாகும். அது தேவனுடைய திட்டமாகும். அது எப்போதுமே தேவனுடைய திட்டமாக இருந்து வருகின்றது. அது எப்பொழுதுமே தேவனுடைய திட்டமாகவே இருக்கும். "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியானாலேயே ஆகும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அதிலிருந்து தான் காரியமானது வருகின்றது. ஒரு முறை லாங்கபெல்லோ (Longfellow) இவ்விதமாகக் கூறினான்: "வெற்றி பெறுவதற்கான வழி என்னவென்றால் மிகவும் போற்றிப் பேசப்படுகின்ற ஒரு நல்ல காரியத்தை கண்டு பிடித்து அதை அப்படியே பற்றிக் பிடித்துக் கொண்டிருப்பதே” என்றான். நிச்சயமாக. ஏதோ ஒன்றைக் குறித்து பேசப்படுகின்றது. விஞ்ஞானத்தினால் வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்ட அந்த ஒன்று, ஆகவே அது நலமான ஒன்றாக இருக்குமானால் அப்பொழுது அதை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியுமா, 1872-ம் வருடத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மருத்துவ கூட்டுச் சங்கமானது குளிப்பதற்கு பயன்படும் குளியல் தொட்டிகளை (Bath tub) உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை நீங்கள் அறிவீர்களா-? அவை மிகவும் அசுத்தமானவை என்றும் அவை நோய்களை பரப்பும் என்று அவர்கள் கூறினர். குளியல் தொட்டிகள் - முடிவில் அவர்கள் கூறினது ஏற்றுக் கொள்ளப்பட்டது. 28. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்ற ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் கழுவப்படுதல் என்பதான இந்த பழங்கால பாணியிலான சுவிசேஷமானது, அது பழமை பாணியிலான ஒன்று போல காணப்படும். ஆனால், கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ அவர்கள் அதனிடத்தில் வந்து தான் ஆகவேண்டும். அது ஒரு நல்ல காரியமாகும். நீங்கள் கொண்டுள்ள எல்லாவற்றையும் கொண்டு அதை அப்படியே பற்றிப் பிடித்துக் கொண்டிருங்கள். அது இரத்தத்தால் கழுவப்பட்ட வழியாகும். அது ஒரு மனிதனை சுத்தமாக்கும். தாங்கள் ஒரு சபையை சார்ந்திருப்பதால் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு அங்கே வெளியே சென்று குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும், சுற்றித் திரிந்து கொண்டிருப்பது அல்ல. அதுதான் சுத்தமான, கலப்படமற்ற பரிசுத்த ஆவியானது ஒரு மானிட ஜீவியத்தில் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாகும். அதன் காரணமாகத் தான் மக்கள் இன்றைக்கு புதிய பிறப்பை வேண்டாமென்று தள்ளுகின்றனர். ஓ, புதிய பிறப்பு என்று தாங்கள் அழைத்துக் கொள்கின்ற ஒன்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர். "நாங்கள் பாஸ்டருடன் கை குலுக்கினோம்". அது அல்ல புதிய பிறப்பு. அதன் காரணமாகத்தான் அவர்கள் - அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை .... அதன் காரணமாகத்தான் அவர்கள் சென்று சபைகளைச் சேர்ந்து கொள்கின்றனர். ஏனென்றால், அவர்கள் ஏதோ ஒரு அறிவுப்பூர்வமான வழியில் உள்ளே வந்திருந்தனர். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்" என்று தேவன் கூறினார். நீங்கள் எவ்வளவாக அறிவாற்றல் திறமிக்கவராக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவாக மிகவும் நல்ல ஒரு கிறிஸ்தவன் என்று உங்களை கூறிக்கொண்டாலும் சரி அது ஒன்றுக்கும் உதவாது, நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். நீங்கள், "சரி, சகோதரன் பிரன்ஹாமே, அப்படியானால் நான் ஒரு கிறிஸ்தவ சபையினிடமாக வரவேண்டுமா-?" எனலாம். அதன் அர்த்தம் அதுவல்ல. அதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் புதிய பிறப்பை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். 29. இது ஆண்கள் பெண்கள் இருக்கின்ற ஒரு கூட்டமாகும். நான் ஒன்றை கூறப் போகிறேன். பிறப்பு என்றால் என்ன-? ஒரு பிறப்பானது வைக்கோல் படுக்கையிலோ அல்லது தரையிலோ அல்லது இளஞ்சிவப்பு நிற பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் கொண்ட ஒரு மருத்துவமனையிலோ நடந்தாலும் சரி. எப்படியாயினும் பிரசவித்து பிறத்தல் என்பது சற்று அருவருப்பு ஊட்டக்கூடியதாகத் தான் இருக்கும். அது சரி. அதே போலத் தான் புதிய பிறப்பும் கூட. அதுவும் அருவருப்பு ஊட்டக்கூடிய விதத்தைப் போலவே இருக்கும், ஆனால், அது ஜீவனைப் பிறப்பிக்கின்றது. எந்த விதமான ஜீவன்-? ஊழியக்காரரின் ஜீவன் உங்களை தாழ்த்துகின்றதற்கும், உங்களையே நீங்கள் மறுதலிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஜீவன், அதுதான் அந்த விதமான ஜீவனாகும். அவர்கள், "ஓ, ஆனால் அவர்கள் அழுவதையும், பீடத்தண்டை ஊ . ஊஊ என்று சத்தமிட்டுக் கொண்டு அப்படியாக குரலெழுப்புவதையும் நான் காண்கிறேனே” என்று கூறுகின்றனர். நிச்சயமாக. அவர்கள் பிறந்து கொண்டிருக்கின்றனர். அது பார்வைக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. நீங்கள் உங்கள் முகம் முழுவதுமாக கண்ணீரால் ஓடச் செய்யலாம். உங்கள் கண்கள் சிவக்கும்படிக்குச் செய்யலாம், பீடத்தை உங்கள் கைகளால் தொடர்ந்து தட்டினதால் உங்கள் கரங்கள் சிவந்து வீங்கிப் போகலாம். ஆனாலும், அது ஒரு பிறப்பேயாகும். அது உங்களுக்கு ஏதோ ஒன்றைக் செய்கின்றது. அது உங்களை பிறருக்கு பணிவிடை செய்யும் ஊழியக்காரனாக (Servant) ஆக்குகின்றது. அது உங்களில் இருக்கின்ற தேவையற்ற காரியங்களை வெளியே எடுத்துப்போடும். அது ஒரு சாயலை உருவாக்கும், ஒரு புதிய ஜீவனை வனைந்து உருவாக்கும். ஒரு புதிய சிருஷ்டிப்பைச் செய்யும் நீங்கள் மேலே எழும்பும் போது எல்லாமே அருவருப்பு போல இருக்கும். ஆனால், நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் பரவாயில்லை . அது ஒரு புதிய ஜீவியத்தை உருவாக்குகின்றது. அது ஒரு புதிய சாயலான ஜீவனை, ஜீவியத்தை பிறப்பிக்கின்றது. அது உங்களிலிருந்து ஒரு பணியாளனை, ஊழியக்காரனை (Servant) கொண்டு வருகின்றது. அப்பொழுது நீங்கள் ஊழியம், பணிவிடை செய்பவனாக இருக்க விரும்புகிறீர்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவியாயிருக்க, ஊழியம் செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யும் போது, நாம் அவருக்கு ஊழியம் செய்கின்றோம். 30. இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். வியாதியுள்ளவர்களுக்கு தான் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது - அவர்களுக்கு ஊழியம் , தொண்டுதவி செய்யவேண்டியுள்ளது. வியாதியஸ்தர்களுக்கு, அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஆகவே, நீங்கள் ஒரு பிரசங்கியை பார்ப்பீர்களானால்... "நான் ஒரு பெரிய ஆள்” என்று கூறுகின்றனர் : நான் அதை ஒரு பிரசங்கிக்கு மாத்திரம் அக்காரியத்தை குறிப்பிடுவதில்லை, ஆனால் தன்னை, தான் ஒரு முக்கியம் வாய்ந்தவன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒவ்வொரு சபை அங்கத்தினனுக்கும் நான் இதை குறிப்பிடுகிறேன். நினைவில் கொள்ளுங்கள். அங்கே ஆவிக்குரிய வியாதியுள்ள நபர் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்முடைய கவனம் தேவைப்படுகின்றது. அவர்களுக்கு தேவனுடைய ஆவியின் கவனம் தேவைப்படுகின்றனது அது தாமே அவர்களில் இருக்கின்ற, தான் பெரியவன் என்கின்ற எண்ணம் எடுத்துப் போடப்பட்டு, அவர்களுடைய தன்னலத்தை மாத்திரமே கருதுகின்ற காரியத்திலும், அவர்களுடைய சீரிய பெரிய கருத்துக்களிலிருந்தும் நான் தான் பெரியவன், நீ சிறியவன்” என்கின்ற எண்ணத்திலிருந்தும் அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. பரிசுத்த ஆவியானவர் நாம் எல்லாரையுமே ஒரே விதத்திலே இருக்கும்படியாகச் செய்கின்றார். மிக அதிகமாக ஆவிக்குரிய வியாதி பீடிக்கப்பட்டுள்ளது ஆவிக்குரிய இரத்த சோகை.... இரத்த சோகை என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா-? அது ஒருவருக்கு இரத்தமே இல்லாத ஒரு நிலையாகும். அவர்கள் நேராக நடக்காமல் ஒருவிதத்தில் நடந்து செல்வார்கள். அவர்கள் எப்பொழுதுமே மேலும் கீழுமாக அசைந்து அசைந்து நடப்பார்கள். இன்று சபைகளில் இருக்கும் அங்கத்தினர் அநேகரின் நிலையும் கூட அதே விதமாகத் தான் உள்ளது. அவர்களுக்கு இரத்தம் இல்லாமல் வெளிறிய நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு கல்வாரியின் இரத்தம் செலுத்தப்படுதல் அவசியமாயிருக்கின்றது. அது அவர்களுக்கு எல்லா அணுக்களும் நிறைந்த ராஜரீக இரத்தத்தை அளித்து அவர்களை பழங்கால பாணியிலான, பரிசுத்த ஆவியால் வெட்டி செதுக்கப்பட்ட தேவனுடைய வழியில் நடக்கச் செய்யும், அது அவர்கள் ஜீவிப்பதற்கான ஒன்றை அவர்களுக்கு அளிக்கும், தங்களுடைய கர்த்தரின் சாயலில் நடக்கும்படிக்கு அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். 31. என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்ய வேண்டும் என்று இருந்தால், நான் அவரைப் போலவே இருக்க விரும்புவேன். அவர் ஒரு மேய்ப்பனாக இருக்கவே வந்தார், அவர் மேய்ப்பனாக இருந்தார். ஒரு மேய்ப்பன் தன்னுடைய மந்தைக்குப் பின் செல்லும் ஒருவனாகவே இருக்கின்றான். ஒரு பிரபலமான படம், அது இங்கே நம்முடைய சுவர்களில் தொங்கவிடப்படவில்லை. ஆனால், நான் அதை என்னுடைய அறையில் வைத்துள்ளேன். அதை நோக்கிப் பார்த்துள்ளேன். இந்த நேரத்தில் அதை வரைந்த ஓவியனின் பெயர் எனக்கு நினைவுக்கு வரவில்லை . அந்த மேய்ப்பன் மந்தையை விட்டு ஓடிப்போன தன்னுடைய சிறிய ஆட்டை. தேடிச் செல்கையில் இருக்கின்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டு விட்டு அதைத் தேடிச் செல்கின்றான். அப்பொழுது அவன் என்ன செய்கின்றான்-? அவன் வனாந்திரங்களின் உள்ளே அங்குமிங்கும் தேடிச் செல்கிறான் . முட்களினால் அவன் குத்தப்படுகிறான் , தோலை சிராய்த்துக் கொள்கிறான். பலவித ஆபத்துகளினூடாகச் செல்கிறான். இரவு முழுவதும் தேடுகிறான், முடிவில் மலையின் பக்கத்தில் கீழே ஒரு சிறு புதரைப் பிடித்து தொங்கிக் கொண்டு தன்னுடைய சொந்த ஜீவனை பணயம் வைத்து, மெதுவாக அந்த ஆட்டை பிடித்து அது வீழ்ந்த நிலையில் இருந்து அதை தூக்கி மேலே எடுக்கின்றான். பிறகு அதை தன்னிடமாக கொண்டு வந்து சேர்த்துக் கொள்கிறான் . மற்றொரு ஓவியன் அந்த மேய்ப்பன் அதை தன் வீட்டுக்கு கொண்டு வருவது போல ஒரு ஓவியத்தை வரைந்துள்ளான். இப்பொழுது, மேய்ப்பன் தன்னுடைய கரத்தை நீட்டி அதை அந்த ஆட்டின் அடிப்பாகத்தில் வைத்து அதை தூக்கிக் கொண்டு வருவது போல காணப்படுகிறது. ஆனால், ஆவியானவர் அந்த ஓவியனின் தூரிகையை (brush) கையாண்ட விதத்தை நீங்கள் கவனித்தீர்களா, அவன் அந்த ஆட்டை தன்னுடைய கரத்தில் அக்குளில் வைத்திருக்கவில்லை. ஆனால், அவனுடைய தோளின் மீது அதை வைத்திருந்தான். 32. இப்பொழுது, அந்த மேய்ப்பனுடைய பராமரிப்பை நீங்கள் காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, இயேசு, அவர் பிசாசுகளை துரத்தினபோது அவர் தேவனுடைய விரலினாலே அதைத் துரத்தினதாக கூறுகின்றார். இப்பொழுது, பிசாசு உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருப்பானானால், தேவன் செய்கின்ற ஒரே காரியம் என்னவென்றால், அந்த பிசாசு குறிப்பிடப்படக் கூடாதபடிக்கும் கூட மிகச் சிறியவனாக இருக்கின்ற அவனை விரட்ட தேவன் தம்முடைய விரலைக் கொண்டு அவனை துரத்துகின்றார். ஆனால். ஒரு ஆடு வீட்டிற்கு வரும்போது.... ஒரு மனிதனுடைய பலம் பொருந்திய பகுதி எது என்று உங்களுக்கு தெரியுமா-? அவனுடைய தோள்கள், நீங்கள் ஒரு மனிதனை கவனிப்பீர்களானால் அவனுடைய தோள்கள் தான் பெரிதானதாக இருக்கின்றது. மிகப் பெரிய பார சுமையை அவன் எங்கே வைத்து சுமக்கின்றான். தன்னுடைய தோளின் மேல் போட்டு அதை சுமப்பான். ஒரு பெரிய மூட்டையை, சுமை கீழே விழாமல் கொண்டு செல்ல தன் உடலில் எந்த பாகத்தை உபயோகிப்பான்-? அந்த பாரமானது அவனுடைய தோள்களின் மேல் வைக்கப்பட்டிருந்தால் அது விழவே விழாது. ஆகவே அவர் அந்த ஆட்டை எடுத்து அதை தம்முடைய தோளின் மேல் வைத்து மெதுவாக அதை சுமந்து நடந்து செல்கின்றார். இழக்கப்பட்டு போன அந்த சிறு நபரை திரும்பவும் கொண்டு வர தேவனுடைய எல்லா வல்லமைகளும், பலமும் அங்கே உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால், பிசாசை கையாளுவதோ மிகவும் சுலபம், அவர் அவனை தம்முடைய விரலைக் கொண்டு விரட்டுகின்றார். அவர் மேய்ப்பன் ஆவார். 33. ஒரு மேய்ப்பன் காணாமற் போய் வழி விலகி சுற்றி திரிகிறவைகளை கண்டெடுக்க அவனும் புறப்பட்டு தேடித் திரிந்து பார்க்க வேண்டியவனாக இருக்கின்றான். ஆகவே, ஒரு நல்ல பாஸ்டர் தான் ஒரு மேய்ப்பன் ஆவான். வெளிப்படையாகக் கூறுவோமானால், "பாஸ்டர்” (Pastor) என்ற வார்த்தைக்கு "மேய்ப்பன்” என்று அர்த்தம். சில சமயங்களில் சபையில் தீவிர வெறி ஈடுபாட்டுடன் ஒரு சிறு குழு எழும்பும் அல்லது தனி நலன்களுக்காக செயல்படும் சிறு குழுவானது எழும்பும். ஒரு குழு ஒரு வழியாக செல்லும், இன்னொரு குழு மற்றொரு வழியில் சென்று கொண்டிருக்கும். ஆகவே, ஒரு உண்மையான மேய்ப்பன் அந்த குழுவினரிடம் செல்வான், எதற்காக அவர்களுடன் செல்வான்-? அவர்களை திரும்பவுமாக கொண்டு வரும்படியாகத்தான் . ஒரு உண்மையான, உத்தமமான மேய்ப்பன் என்ன செய்து கொண்டிருப்பான்-? அவனே புறப்பட்டுச் சென்று தேடித் திரிவான், எதற்காக அப்படிச் செய்கின்றான்-? இழக்கப்பட்டுப் போனதை திரும்பவும் கொண்டு வரவே. அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்-? அந்த நல்ல மேய்ப்பனின் சாயலை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறான், அந்த ஆத்துமாவை மறுபடியுமாக ஆதாயப்படுத்தி திரும்பக் கொண்டு வர முயற்சிக்கின்றான். அவர்கள் ஒரு இடத்திலிருந்து வழி விலகுவார்களானால், சகோதரனே, அவர்கள் ஒரே இரவில் உலகத்தையே கிழித்து விடுகின்ற அளவிற்கு அப்படியே இருப்பார்கள், அப்பொழுது அந்த பாஸ்டர் சரியாக அவர்களை ஒழுங்கிற்குள் கொண்டு வர நேராக அவர்களிடமாக சென்று, அவர்களை மறுபடியுமாக இந்த வழியிற்கு கொண்டு வர அப்படியாக செய்வார். அதுதான் ஒரு நல்ல மேய்ப்பனாகும். அவன் கிறிஸ்துவின் சாயலை பிரதிபலிக்கின்றான். சகோதரனே, அது துரோகம் என்று அழைக்கப்படுகின்றது; அது அதி தீவிர மூடபக்தி வைராக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், இன்றிரவு நான் ஒரு தீர்மானம் செய்யும்படிக்கு இருக்குமானால், என்னுடைய தீர்மானம் அவரைப் போல இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒன்று எனக்கு தேவைபடுமானால், அது என் ஜீவியத்தில் கர்த்தராகிய இயேசுவின் சாயலை பிரதிபலிக்கவேண்டும் என்பதே அதுவாக இருக்கும். 34. நான் புறப்பட்டுச் செல்கிறேன், நாளை இரவிற்கு பிற்பாடு... இந்த விவாகத்திற்கு பிறகு, நான் வனாந்தரத்துக்கு செல்ல புறப்படுகிறேன், அங்கே தங்கவே நான் விழைகிறேன், ஏனென்றால் இப்போதுள்ளதைக் காட்டிலும் நான் தேவனுடன் ஒரு நெருங்கின நடையைச் செய்ய என் ஆத்துமாவின் ஆழத்திலே நான் உந்தப்படுகிறேன் .... நான் வெறுமனே நடக்க அல்ல..... ஆனால் அவருக்கு முன்பாக சரியாக நடக்க நான் முயற்சி செய்கின்றேன் . ஆனால் நான் - நான் அவருடன் ஒரு நெருக்கமான நடையை கொண்டிருப்பதை நான் விரும்புகிறேன். பிரன்ஹாம் கூடாரம் ஒரு எழுப்புதலை கொண்டிருக்கையில், எனக்கும் ஒரு எழுப்புதல் தேவையாக நான் அதை கொண்டிருக்க விரும்புகிறேன். அது கட்டடத்தில் மாத்திரம் நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை; அது எனக்குள் சம்பவிக்கவே நான் விரும்புகிறேன். ஒரு நெருங்கின நடையைச் செய்யவே நான் விரும்புகிறேன். கிறிஸ்து என்னில் பிரதிபலிக்கச் செய்ய எனக்கு இன்னுமாக பரிசுத்த ஆவி அதிகமாக தேவையாயிருக்கிறது. நான் அவரைப் போலவே இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் அவரைப் போலவே இருக்க வாஞ்சிப்பான் என்பது எனக்குத் தெரியும். இயேசுவைப் போல இருப்பதே என்னுடைய இருதயத்தின் வாஞ்சையாகும். அவர் ...... ஆம், நான் விரும்புவது என்னவென்றால் அவர் என்னுடைய ..... அவர் தாமே அந்த ... நான் என்னவாக இருக்க விரும்புகிறேனோ அதன் உதாரணம் அவரே தான். என்னால் செய்ய முடிகின்ற ஒரே காரியம் அது ஒன்று மாத்திரமே. 35. நாம் வேதகலாசாலைகளிலும், எனக்கு கூறும்படிக்கு யாரோ ஒருவர் சொன்ன உபதேசத்திலும் எனக்கு எந்த ஒரு அக்கறையும் விருப்பமும் இல்லை. சிலுவையில் அறையப்பட்ட உருவத்தை முத்தமிடுவதோ அல்லது இருதயத்தைக் கொண்டு ஒன்றை இழுப்பதோ அல்லது மரித்தவருக்கு ஜெபங்களை ஏறெடுப்பதோ என்பவைகளை நான் பொருட்படுத்துவதே கிடையாது. ஒரு காரியத்தில் மாத்திரமே நான் ஈடுபாட்டை உடையவனாக இருக்கின்றேன், அது வில்லியம் பிரன்ஹாமை பரிசுத்த ஆவியானவர் இன்னும் அதிகமாக கட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. நான் இருக்கின்ற சபையைக் காட்டிலும் இன்னும் பெரிய ஒரு சபையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற நாட்டம் எனக்கு இல்லை. அந்த முதற்பேரானவரான - ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையைச் சேர்ந்தவன் நான். நான் அதற்குள்ளாகப் பிறந்திருக்கின்றேன். நான் நேசிக்கின்ற கிறிஸ்துவை பிரதிபலிக்க இன்னுமாக அதிகமாக பரிசுத்த ஆவியை கொண்டிருக்க வேண்டும் என்றே நான் வாஞ்சிக்கின்றேன். எந்த ஒரு சரியான மட்ட அளவையோ அல்லது நிலையிலோ வந்து அதற்குள்ளாக செல்ல வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையில்லை. நான் இங்கே செல்லவேண்டியதாக இருக்கும் அல்லது அங்கே செல்ல வேண்டியதாக இருக்கும், ஒரு அதி தீவிர மூட பக்தி வைராக்கியம் கொண்டவன் என்றோ, பரிசுத்த உருளையன் என்றோ அல்லது எந்த விதமாக நான் அழைக்கப்பட்டாலும் பரவாயில்லை, அவருடைய ஜீவியத்தை நான் இன்னுமாக பிரதிபலிக்கிறவனாக காணப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். எந்த சரிசமமான அளவில் நான் உயர்த்தப்பட்டு வர வேண்டும் என்பதில் எனக்கு நாட்டம் இல்லை. நான் பரிசுத்த ஆவியில் தான் அதிக விருப்பம் கொண்டுள்ளேன். அதினாலே நான் அவர் எப்படியாக இருந்தாரோ அதை விட நான் ஒரு ஊழியக்காரனாக, வேலைக்காரனாக (Servant) இருக்க ஏதுவாக அது இருக்குமே. அவர் கர்த்தருடைய தாசனாக (Servant) இருந்தார். அவர் தமக்கு பணிவிடை செய்யப்பட அல்லது ஊழியங்கொள்ள அவர் வரவில்லை . அவர் ஊழியம் கொள்ளும்படிக்கு ஒருக்காலும் வரவேயில்லை . ஆனால், ஊழியம் செய்யும்படிக்கே வந்தார். அவர் ஒரு பணிவிடைக்காரனின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். ஆகவே பரலோகத்தின் ராஜாவால் அதைச் செய்ய முடியும் என்றால், அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகிய நாமும் கூட அதே விதமாகவே செய்யக்கடவோம். வித்தியாசமாக இருப்பது அல்ல, ஆனால், அவருடைய பிரசன்னத்தில் நம்மை தாழ்த்துவதே ஆகும். உலகம் என்ன கூறினாலும் சரி அல்லது அறிவுக்கூர்மையான ஜனங்கள் என்ன கூறினாலும் சரி, அது ஒரு பொருட்டே அல்ல; அதைக் குறித்து ஒன்றுமே யோசனை பண்ண வேண்டாம். பரிசுத்த ஆவியை இன்னும் அதிகமாக பெற்றுக்கொண்டு இயேசுவைப் போல இருங்கள்: தாழ்த்துங்கள், சாந்தமுள்ளவராகவும். மனத்தாழ்மையுள்ளவராகவும் இருங்கள். அவருடைய இடத்தை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். நியாயத்தீர்ப்பில் அவர் உங்களுடைய இடத்தை எடுத்துக் கொள்வார். 36. இப்பொழுது நம்முடைய தலைளை சற்று தாழ்த்துவோம். இந்த கட்டடத்தில் இந்த சபையின் அங்கத்தினர்கள் மற்றும் மற்ற சபைகளின் அங்கத்தினர்களின் கரங்களை நான் காணுவேனாக. நான் இந்த சபை என்று கூறுகையில், ஒரே ஒரு சபை தான் உண்டு என்றே நான் கூற விழைகிறேன்; அது மறுபடியும் பிறந்தவரின் சபை, முதற்பேரானவரின் சபை, உலகத்தினாலே பிறந்திராத ஆனால் தேவனுடைய ஆவியால் பிறந்த இயேசு கிறிஸ்துவின் சபை என்பதே. ஒரு கூட்ட கைகள் மேலே உயர்த்தப்பட்டு "தேவனே, என்னை இயேசுவைப் போல ஆக்கும். கர்த்தாவே, ஓ, என்னை வனையும். ஓ, தேவனே என்னை கழுவும்” என்று கூறும்படிக்கு நான் காணட்டும். தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. “என்னை கழுவும், அப்போது நான் பனியைக் காட்டிலும் வெண்மையாக இருப்பேன்.'' "கர்த்தாவே. என் வாழ்க்கையில் சிறிது முறுக்கல்களும், வளைவுகளும் இருக்கின்றன. நான் உட்கார்ந்து சகோதரன் பார்னல் சகோதரன் - சகோதரன் நெவில் மற்றும் இன்னும் பிற அருமையான ஊழியக்காரர்கள் மற்றும் சகோதரன் காலின்ஸ் இன்னும் பிரசங்கிக்கின்ற அநேக சகோதரர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், கர்த்தாவே, இன்றிரவு, நான் இந்த முடிவிற்கு வந்துள்ளேன்; அவர்கள் எனக்கு என்ன கூறிக்கொண்டிருக்கிறார்கள்-? எனக்கு புரியும்படிக்கு அவர்கள் கூறி என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்-? நான் காண்பது என்னவென்றால் நான் இயேசுவைப் போல இருக்கும் படியாக அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதேயாகும். அதைச் செய்வதற்கு எனக்கு எந்த ஒரு வழியும் இல்லை . நான் - நான் ஒரு சிறுத்தை ஆவேன். என் மேல் கரும்புள்ளிகள் உண்டு. அவைகளை நான் என் நாவால் நக்கினாலும் அப்புள்ளி தெளிவாக காணப்படும்படிக்கு மாத்திரம் தான் என்னால் செய்யமுடிகின்றது. அவை உலகத்திற்கு இன்னும் தெளிவாக காணப்படுகின்றன." காத்தாவே, நான் என்னையே இழந்து போகும்படிக்குச் செய்யும். உலகத்திற்கு அது எந்தவித அருவருப்பளிக்கின்றதாகவே காணப்பட்டாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. நான் தேவனுடைய ஆவியாலே மறுபடியும் பிறக்கவே விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் எனக்கு வேண்டும், இன்றிரவும் உம்முடைய ஆவியினாலே என்னை நிரப்பும். என்னைக் கழுவும், என்னை பரிசுத்தப்படுத்தும். இயேசுவின் இரத்தம் என்னை பரிசுத்தப்படுத்தட்டும். கர்த்தாவே உமக்குள்ளாக நான் அதை கண்டெடுத்து என்னை நான் இழந்து போகச் செய்யும் வரைக்குமாக என்னை சுத்தமாக்கும், என்னை நிரப்பும்." 37. ஓ, கர்த்தராகிய தேவனே, வானத்தையம், பூமியையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரே, இயேசுவை மரித்தோரிலிருந்து மறுபடியுமாக உயிர்த்தெழப் பண்ணின தேவனே, நித்திய தேவனின் உயிர்ப்பிக்கும் ஆவியாலே அவரைக் கொண்டு வந்தவரே, நீர் வாசம் பண்ணின அந்த சரீரத்தை எழுப்பி கொண்டு வந்தவரே, அதை உம்முடைய சிங்காசனத்திற்கு உயர்த்தினீர் ...... பூமியிலே மிகவும் கீழான ஒரு நிலையில் இருந்தவர்களிடம் நீர் வந்தீர், ஒரு விபச்சாரியிடம் வந்தீர், மிகவும் கீழான நிலையிலான ஒரு அடிமையின் ரூபமெடுத்து வேலைக்காரனாக நீர் ஆனீர். மிகவும் கீழான நிலையில் இருந்த ஒரு பட்டினத்துக்கு சென்றீர். மிகவும் கீழான நிலையில் இருந்த மக்களிடம் நீர் ஈடுபட்டீர், மிகவும் கீழான ஒரு அவப்பெயரை நீர் பெற்றீர். ஏழைகளைக் காட்டிலும் நீர் மிகவும் ஏழையானீர், இயற்கையைக் காட்டிலும் நீர் கீழானீர் , பறவைகளுக்கு கூடு இருந்தது, நரிகளுக்கு குழிகள் இருந்தது. ஆனால், மனுஷ குமாரனுக்கு தம்முடைய தலை சாய்க்க இடமில்லாதிருந்தது. ஆனாலும், நாம் பின்பற்றும்படிக்கு ஒரு உதாரணமாக இருக்கும்படிக்கு தம்மையே ஒரு வேலைக்காரனாக ஆக்கிக் கொண்ட அந்த உண்மையான ஊழியக்காரனை, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையானது கனம் பண்ணி, அவரை பாதாளத்தின் வாசல்களிலிருந்து அவரை மேலே எழுப்பி அந்த சரீரத்தை வெளியே கொண்டு வந்து, அதை வானாதி வானங்களில் அமரச்செய்து, அவர் வானங்களை குனிந்து பார்க்கின்ற விதத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை மிகவுமாக உயர்த்தப்படும் படிக்கு அவரை உயர்த்தினது, ஒவ்வொரு நாமத்திற்கு மேலாக அவருக்கு ஒரு நாமத்தை அளித்தது, வானோர் பூதலத்தோர் .... 38. கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் தாமே அவருடைய ஆவியை பெறுவோமாக. இங்கு குழுமியுள்ள ஒவ்வொரு இருதயத்தின் பசியாக அது இருப்பதாக. கர்த்தாவே, மேலே உயர்த்தப்பட்ட கரங்களை நீர் கண்டீர். போதகங்களை உச்சரிக்கவோ அல்லது சபைகளை சேர்ந்து கொள்ளவோ அல்லது - அல்லது இந்த மற்றும் அந்த காரியங்களின் மீது வீண் வாதம் செய்யவோ அல்ல, ஆனால், எங்கள் இருதயங்களில் தாழ்மையாக இருக்கவும், தேவனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க உண்டாக்கப்பட்டிருக்கும்படிக்குச் செய்வீராக, கர்த்தாவே. அது பரிசுத்த ஆவியானவராலே செய்யப்படுவதாக. தேவனுடைய பரிசுத்த ஆவி எங்களை உருவாக்குவதாக, நாங்கள் இப்படி இருக்கவேண்டும் என்று இப்படியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு அறிவுப்பூர்வமான கருத்தினாலே அல்ல .... அது தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாகும். ஆனால், கர்த்தாவே, அது ஒரு புதிய பிறப்பிற்குள்ளாக பரிசுத்த ஆவியாலே உண்மையாகவே அது சம்பவிக்கட்டும். அது எங்களை எங்கள் ஆவியின் புதுப்பித்தலினாலே மறுரூபமாக்கி அவரைப் போல் இருக்கும்படிக்கு செய்யட்டும். கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும். அது பலவீனமான ஒன்றாகும்; கர்த்தாவே அதை நான் அறிவேன். அது பெலவீனமான ஒன்றாகும். தங்கள் கரங்களை உயர்த்தினவர்களுக்காக மாத்திரம் நான் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் உயர்த்தப்பட்டுள்ள என்னுடைய கரங்களுக்காகவும் கூட நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். என்னை அவரைப் போலவே ஆக்கும். தேவனே, நீர் எனக்கு என்ன செய்திருப்பினும் பரவாயில்லை. எந்த அளவைக் கொண்டு நான் வந்திருந்தாலும் சரி, என்னை அவரைப் போல இருக்கச் செய்யும். என் இருதயத்தில் நான் இயேசுவைப்போல் இருக்கும்படிக்குச் செய்யும். கர்த்தாவே, இதை அருளும். மேலும், நான் மாத்திரம் அல்ல, ஆனால், இங்கே இன்றிரவு இருக்கும் எல்லாரையும் அப்படியாக இயேசுவைப் போல இருக்கும்படிக்குச் செய்யும். பிதாவே, இதை அருளும், நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம் ஆமென். 39. சபை அங்கத்தினராக இருப்பதெல்லாம் சரிதான். அதற்கெதிராக என்னிடத்தில் ஒன்றுமில்லை, அல்லது அவைகளில் எந்த ஒன்றிற்கும் எதிராக இல்லை . ஆனால், சகோதரனே, ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்றால் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பது தான். நாம் ஜீவிக்கின்ற சாயல்களாக இருக்க விரும்புகிறோம். அசைவற்று பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சாயலைப் போல் அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசுவின் சாயலாக இருக்கும்படியாக விரும்புகிறோம். ஒரு சிறிய பாடல் இருக்கின்றது நான் அதை பாட நீங்கள் எனக்கு இப்பொழுது உதவும்படிக்கு நான் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு தெரியாது, என்னால் அதை பாட முடியாது. ஆனால், நீங்கள் நிச்சயமாக எல்லாரும் அதைப் பாடுவீர்கள் என்பது உறுதி. "இயேசுவைப் போல இருக்க எனக்கு உதவி செய்யும்”. எத்தனை பேர் இதற்கு முன்னர் அதைப் பாடக் கேட்டிருக்கிறீர்கள்-? அந்த விதமாகத்தான் நாம் எல்லாரும் இருக்க விரும்புகிறோம் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, நாம் அவரை நோக்கி இதை பாடுவோம். அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார் என்பதை என்னால் அறிந்து உணர முடிகின்றது. உங்களால் அதை மறைக்க முடியாது. தாவீது "நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்" என்று கூறினான். அவர் - அவர் எல்லா இடங்களிலும் இருக்கப் போகின்றார். ஆகவே, அவர் இன்றிரவு சரியாக இங்கே இருக்கின்றார். அவர் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயலையும், நாம் செய்யும் எல்லா காரியத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், ஒவ்வொரு பார்வையையும், ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், அதைக் குறித்து எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? ஆகவே..... இயேசுவைப் போல், இயேசுவைப் போல் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். அது உங்களுக்கு விருப்பமல்லவா-? இப்பொழுது இதை நீங்கள் சற்று கேளுங்கள் . பெத்லெகேம் தொழுவத்தில் உதித்த புதியவரே, பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன் 40. சரியாக இப்பொழுது என் மனதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா-? நேற்று நான் சபையின் பழைய பெயர் பட்டியல் புத்தகம் மற்றும் வரவு செலவு புத்தகத்தை நான் எடுத்துப் பார்த்தேன். அதை நான் பார்த்தேயில்லை. ஆம், வெளிப்படையாக கூறுவேனானால், அப்பொழுது தான் முதல் முறையாக அதை படித்துப் பார்த்தேன். சபை முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது அதை நான் உபயோகிக்க வேண்டியிருந்தது. அதிலே சகோதரள் சீவர்ட் அவர்களின் பெயர் இருந்தது. அதிலே சகோதரன் ஜார்ஜ் டிஆர்க் மற்றும் சகோதரன் வெபர் மற்றும் அவர்கள் பெயர்கள் எல்லாம் அதிலே காணப்பட்டன. சிறிய ஞாயிறு பள்ளி வகுப்புகளை நான் பார்த்தேன். ஐந்து வகுப்புகளின் மொத்த காணிக்கை ஒரு டாலர் அறுபது செண்ட் ஆக இருந்தது. இந்த கூடாரத்தில் நூற்றுக்கணக்கானோர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு டாலர் அறுபது செண்டுகள். பாருங்கள்-? பிறகு இன்றைக்கான பக்கத்தை நான் பார்த்தேன். அப்பொழுது நான் "எத்தனைப் பேர் கடந்து சென்றுவிட்டனர்-?" என்று நினைத்தேன். அதிலே சகோதரன் ப்ராங்க் ப்ராய் பெயரைக் கண்டேன். என் சொந்த ...... அது என் மாமனார் ஆகும். அதில் அக்காலத்தில் இருந்தவர்களின் பெயர்களை நான் கண்டேன். திருமதி. வெபர் அவர்கள் எல்லாரும் கடந்த வருடங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாருமே, ஏணியில் ஏறிவிட்டனர். மேலே சென்று விட்டனர். அவர்கள் எல்லாரும் சென்று விட்டனர். 41. இங்கே நாங்கள் நின்றது எனக்கு நினைவிலிருக்கின்றது. அப்பொழுது நான் "தேவனாகிய கர்த்தாவே, எங்கள் சபை சிறிது இன்னும் சிறப்பாக காணப்படட்டும், நாங்கள் ஒன்றை கட்டவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். ஆனால், கர்த்தாவே, அப்பொழுது நீர் எங்களை நேசித்தது போல இன்னுமாக எங்களை இப்பொழுது நேசிக்கின்றீரா-?” என்று நான் நினைத்தேன். அப்படியாக இல்லை. அப்படிச் செய்வதில்லை என்று நான் நம்புகிறேன். நாங்கள் எழுந்து நின்று "அவரைப் போலவே வாழ நான் வாஞ்சிக்கின்றேன், வாழ்க்கை பிரயாணம் முழுவதும்" என்று பாடுவதுண்டு. அந்த சிறு வயது சென்ற ஜார்ஸ் தன்னுடைய சட்டை பட்டை திறந்திருக்கையில், வியர்வை அவரிலிருந்து ஓடும். தன் கைக்குட்டையை தன் விரலுக்கிடையில் மடித்து பிடித்துக் கொண்டு இருப்பதை என்னால் காணமுடிகிறது. அங்கே முன்பிருந்த அந்த அருமையான வயதான பரிசுத்தவான்களின் முகங்களை என்னால் காணமுடிகின்றது. அவர்கள், "ஏய், பையனே, எப்படி உன்னால் ஜனங்களை ஒரே மனதோடு கூடியிருக்கும்படிக்கு செய்ய முடிகின்றது-?" என்று கூறுவர். அதற்கு நான் அதில் எனக்கு எந்த ஒரு பங்கும் கிடையாது" என்பேன். அவர்கள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய சாயலுக்கு மறுரூபமாக்கப்பட்டு, அவர்கள் அங்கே அந்த பழைய மரத்தூளால் நிறைந்த உட்காரும் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கையில் தங்கள் இருதயத்தின் ஆழத்தில் எங்கோ ஓரிடத்தில் கிறிஸ்துவை கண்டு கொண்டனர். என்ன ஒரு நறுமணம் கொண்ட இரட்சகர். இரவு முழுமையாக அவர்கள் ஜெபங்கள் தொடர்ந்து மேலே சென்று கொண்டே இருந்தன. நாங்கள் சில சமயங்களில் உள்ளே வருவோம். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்வோம். பொழுதுவிடிந்த உடனே வீட்டிற்கு செல்வோம். இரவு முழுமையாக ஜெபிப்போம். 42. அந்தவிதமான ஒரு உத்தமம் இன்னுமாக நம்மிடையே இல்லை. அது முழுவதுமாக சென்றுவிட்டது போல இருக்கின்றது. காரணம் என்ன-? என்ன காரணம்-? நாம் கொண்டிருந்த அந்த ஆதி அன்பிற்கு நாம் திரும்பிச் செல்வோமாக. அப்புறம்: இயேசுவைப் போல், இயேசுவைப் போல் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன் உண்மையாகவே. அப்படி இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா-? நம்முடைய கரங்களை உயர்த்தி நாம் அதைப் பாடுவோம். இயேசுவைப் போல், இயேசுவைப் போல் அவருடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க) அவரை( ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்) அவரைப் போல்( நாமெல்லாரும் அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம். நாம் அவரைப் போலவே இருக்க வேண்டும் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்க மாத்திரம் கேட்கிறேன். நீங்கள் உண்மையாக அப்படியாக இருக்க வேண்டும் என்று விழைகிறீர்களா-? அப்படியானால் "ஆமென்” என்று கூறுங்கள். என்ன, அது இனிமையான ஒரு ஆவி அல்லவா. உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதையே நான் கொண்டிருக்க விரும்புகிறேன். நான் ..... நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும், அதன் ஆடம்பரங்களையும், உங்களுடைய எல்லா அறிவுப்பூர்வமான காரியங்களையும், உங்களுடைய எல்லா டாக்டர் பட்டம் பெற்றவர்களையும், ரபீக்களையும், பிஷப்புகளையும், பரிசுத்த பிதாக்களையும் எடுத்துக் கொள்ளலாம்; எனக்கு இயேசுவைக் கொடுங்கள். அது சரியே. நான் இயேசுவை அந்த பழமை பாணியிலான விதத்தில் கொண்டிருப்பேனாக. என் இருதயத்தின் ஆழத்தில் அவரை நான் உணர்கிறேன். என் ஜீவியங்களை கவனிக்கையில், என்னுடைய வாஞ்சைகள் எல்லாம் அவரை சேவித்து ஊழியம் செய்ய வேண்டும், தாழ்மையாகவும், எளிமையாகவும், மனத்தாழ்மை உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதே. நண்பர்களே, அது தான் நமக்கு தேவையாயிருக்கின்றது, அது ஒரு .... அது இயேசுவே. வேதாகமத்தின் இயேசு , அறிவாற்றலினுடைய இயேசு அல்ல, ஆனால், ஆத்துமாவின் இயேசு. 43. இன்றிரவு அவர் இங்கே இருக்கின்றார். எத்தனை பேர் வியாதியாயும், தேவையுள்ளோராயும் இருக்கிறீர்கள், உங்கள் கரத்தை சற்று உயர்த்துங்கள். அதினாலே நான் உங்களை காண ஏதுவாக இருக்குமல்லவா-? சரி, வியாதியாய் இருக்கின்ற ஒருவருக்காக உங்கள் இருதயத்தில் ஜெபம் செய்ய வாஞ்சை உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள், நான் உங்கள் கரங்கள் மேலே உயர்த்தப்படுவதைக் காணட்டும். சரி. அநேகர் இருக்கின்றனர். அவர் இன்னுமாக மாறாத அதே இயேசுவாக இருக்கின்றார் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்-? (நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகிக்கவில்லை , நான் ..... ஜெப அட்டைகள் இல்லை , அப்படித் தானே-? அது கொடுக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன்) நம்முடைய இரட்சகராகிய இயேசு இன்றிரவு நம்மிடமாக வரமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. ஆகவே நாம் பாடி, நான் அவருடைய சாயலை பிரதிபலித்தலைக் குறித்து பேசுகையில், அவர் இங்கே நிற்பாரானால் அவர் என்ன செய்வார் என்று தெரியுமா-? யோவான் 4-ல் கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயை கண்டபோது, அவள் இருதயத்தில் என்ன இருந்தது என்பதை அறிந்து அவளிடமாகக் கூறி அதை அவளுக்கு விவரித்துக் கூறினார். அப்பொழுது அவள் அவர் தான் அந்த மேசியா என்று அறிந்து கொண்டாள், அப்படிச் செய்தது போல அதே விதமாக இப்போது செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அந்த மகா பிரதான ஆசாரியரான - அந்த அதே இயேசு என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அவர் தாமே ( ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) தேவனுடைய கரம்-? 44. இன்றிரவு நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா-? அந்த அதே இயேசு தாமே ஒரு நாள் நடந்து சென்று கொண்டிருக்கையில், அப்பொழுது ஜெப வரிசை இல்லாதிருந்தது. அப்பொழுது பெரும்பாடுள்ள ஒரு ஸ்தீரி அங்கு இருந்தாள். அவள் கூட்டத்திற்குள்ளாக சென்றாள். இயேசுவின் வஸ்திரத்தை தொடுகின்ற வரைக்குமாக அப்படியாக அவள் கூட்டத்திற்குள்ளாக கடும் முயற்சியுடன் சென்றாள். அப்பொழுது இயேசு திரும்பிப் பார்த்து, "என்னை தொட்டது யார்-?” என்று கேட்டார். நண்பனே அந்த அதே இயேசு தாமே இன்றும் அதே மாறாத இயேசுவாக இருக்கின்றார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? அவளுடைய இருதயத்திற்குள் இருந்த வாஞ்சையானது... பாருங்கள், அவள் பயந்து போனாள். அவள் தொட்டு விட்டு திரும்பிச் சென்று உட்கார்ந்து கொண்டாள். அவள் காத்திருந்தாள். அப்பொழுது இயேசு “என்னைத் தொட்டது யார்-?” என்றார். அப்பொழுது அந்த அந்த... பேதுரு, அந்த அப்போஸ்தலன் அவரை எதிர்த்துரைத்து "கர்த்தாவே, எல்லாருமே உம்மை நெருக்கிக் கொண்டிருக்கையில் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே" என்று கூறினான். அதற்கு அவர், "ஆம், ஆனால், இது வித்தியாசமான தொடுதலாக இருந்தது. என்னிலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றது. நான் - நான் அதை உணர்ந்தேன்" என்று கூறினார். அவர் அந்த சிறு பெண்ணைக் காணும் வரைக்குமாக ஜனக்கூட்டத்தை சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது அவர் அவளை நோக்கி உனக்கு உதிரப்போக்கு இருந்தது என்றும் அவளுடைய விசுவாசம் அவளை சொஸ்தமாக்கினது என்றும் கூறினார். அது அந்த அதே இயேசுதானே-? இன்றிரவு நாம் தாமே நம்மை தாழ்த்தி, பரிசுத்த ஆவியினாலே நம்முடைய ஆவி புதிதாகிறதினாலே மறுரூபமாகுவோமாக, அதினாலே நாம் தாமே நம்முடைய உதடுகளையும், நம்முடைய கண்களையும், உங்கள் விசுவாசத்தையும், என் விசுவாசத்தையும் அர்ப்பணித்து அவர் தாமே ஜனக்கூட்டத்திற்குள்ளாக வந்து உங்களுக்குள்ளாக வந்து, நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசிக் கொண்டிருக்கும் மகா பிரதான ஆசாரியராக இருந்து தம்முடைய வார்த்தையையும் நிறைவேற்றவும் எனக்குள்ளாகவும் அவர் வர ஏதுவாயிருக்கும். அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படிக்கு இருக்கின்றார். அவர் பூமியில் எப்படியாக இருந்தாரோ அதே விதமாக நம்முடைய பலவீனங்களுக்காக தொடப்படக் கூடிய மகா பிரதான ஆசாரியராவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அந்த அதே இயேசு..... 45. தேவை உள்ளவர்கள் மற்றும் வேறு ஒருவருக்காக இங்கே ஜெபிக்கப்பட வந்துள்ளவர்கள் எத்தனை பேர் இங்கே இருக்கின்றீர்கள். உங்களில் சிலரை எனக்கு தெரியாது. மேலும், உங்களுடைய காரியமானது எனக்கு தெரியாது என்று அறிந்துள்ளவர்கள் எத்தனைப் பேர் இங்கே இருக்கிறீர்கள். அந்த விதமாகத்தான் கூறுவதுண்டு. உங்களைக் குறித்தோ அல்லது உங்கள் ஜெப விண்ணப்பத்தைக் குறித்தோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், இயேசு தாமே இங்கே இருந்து தம்மைத் தாமே உறுதிப்படுத்தவும், நமக்கு அவர் பிரசன்னத்தை தெரியப்படுத்தி, இயேசு கிறிஸ்துவாக அப்பொழுது செய்தது போலவே இப்பொழுதும் அதே விதத்தில் கிரியை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அதை விசுவாசிக்கிறீர்கள் என்றால், உங்கள் கரங்களை உயர்த்தலாமே-? உங்களை நான் அறியேன் என்று உங்கள் எல்லாருக்குமே தெரியும். பாருங்கள்-? உங்களை எனக்குத் தெரியாது. சரி, நாம் தொடர்ந்து பார்ப்போம். முதலாவதாக நம் ஒருமித்த சிந்தனையை எங்கே செலுத்தலாம் என்று பார்க்கலாம். இப்பொழுது சற்று பயபக்தியுடன் இருங்கள். அவர் இதைச் செய்வாரானால் நீங்கள் எல்லாரும் அவரை உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசிப்பீர்களா-? என்னால் உணர முடிகிறது. நான் உங்களை மேலே அழைத்து உங்கள் மேல் கரங்களை வைக்க இருந்தேன். நான் அதைச் செய்யப்போகிறேன் என்று விசுவாசிக்காதீர்கள். இயேசு இங்கே இருக்கின்றார் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம்.... அது அல்ல... அவருடைய சாயலான உருவத்தை சுமப்பது அல்ல, ஆனால் அவருக்கொத்த சாயலாக இருப்பதே காரியம் ஆகும். அந்த இயேசுவையே நாம் பெற விரும்புகிறோம். அப்படித்தானே-? ஒரு சாயலாக... சரி. 46. இப்பொழுது, தேவனாகிய கர்த்தாவே, இதோ ஒரு மகத்தான அறிக்கை. ஆனாலும் நீரே, கர்த்தாவே, நீர் தாம் அந்த வாக்குத்தத்தை செய்திருக்கின்றீர். இப்பொழுது, நாம் தொடர்ந்து முன்னே செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது, ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டும். நாங்கள் ஒரு ஸ்தாபனமாக இல்லை. நாங்கள் வெளியே விரட்டப்பட்ட மக்களாக பரிதாபத்திற்குரிய ஏழை சிறிய மக்கள் கூட்டமாக இருக்கின்றோம். எங்களில் அநேகர் அந்த பெரிய அறிவுப்பூர்வமான காரியங்கள் நிறைந்த சபைகளில் இருந்து உதைத்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறோம். நாங்கள் சென்றாலும் அவர்களைப் போல எங்களால் ஆடை உடுத்திக் கொள்ள முடியவில்லை. மேலும், இன்னொரு காரியம், வேதாகமம் கூறுவது போல நாங்கள் எழுந்து நின்று ஆவியானவர் எங்களை ஆசீர்வதித்து நாங்கள் "ஆமென்" என்று கூறுவோம், உடனடியாக நாங்கள் வெளியே துரத்தப்படுவோம். அநேகருக்கு வரவேற்பில்லை, சிலர் தாங்கள் கொண்டிருக்கும் நிறத்தினால் வரவேற்கப்படுவதில்லை. சிலர் தாங்கள் கொண்டிருக்கும் போதகத்தினாலே வரவேற்கப்படுவதில்லை. சிலர் உம்மை அதிகமாக நேசிப்பதினாலே வரவேற்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் தாமே..... அவர்கள் ஆவியைப் பெற்றுள்ளனர்; அவர்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரித்திருக்கின்றனர். மறுபடியுமாக புதிதாக பிறந்துள்ளனர். ஆகவே, அவர்கள் ஒரு புதிய ஜீவனை, வேலைக்காரனின் ஜீவனை பெற்றிருக்கின்றனர். கர்த்தாவே, நாங்கள் இங்கே நீர் கொடுத்திருக்கின்ற இந்த சிறு கூரையின் கீழ் கூடியுள்ளோம், நீர் அளித்திருக்கின்ற இந்த காரியத்தினை நாங்கள் உண்மை உணர்ந்து போற்றுகிறோம். இப்பொழுது, கர்த்தாவே, நீர் தாம் அந்த மாறாத, நான் பேசிக்கொண்டிருக்கின்ற அந்த மகத்தான நபராகிய கிறிஸ்து என்று அறிந்து உணரப்படுவதாக. அவர் அறியப்படும்படிக்கே இப்பொழுது இங்கே அவர் பிரசன்னமாயிருக்கின்றார். அவர் பூமியில் இருந்த போது செய்த அதே விதமாக இப்பொழுதும் செய்யப்படும்படிக்கு இங்கே இருக்கின்றார். பிதாவே, இதை அருளும். அவர்கள் தாமே அதைக் கண்டும் மற்றும் விசுவாசிக்கும்படியாக செய்தருளும், இதை நான் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றேன். ஆமென். 47. நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை பெற்றுக் கொள்வீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசம் என்றால் என்ன-? விசுவாசம் என்றால் சாத்தியம் ஆகும். விசுவாசம் என்பது அது அளிக்கப்படும் என்கின்ற தத்ரூபமான, நீங்கள் அறிந்திருக்கின்ற ஒன்றாகும். விசுவாசம் என்பது நீங்கள் யூகித்தல் என்பதல்ல. விசுவாசம் என்பது உங்கள் ஆத்துமாவின் ஆழத்துக்குள் வருகின்ற ஒன்று என்பதை அறிதலாகும், புரிகின்றதா-? எனக்கு தனிப்பட்ட விதத்தில் அறிமுகமில்லாதவர்கள் மற்றும் நான் தனிப்பட்ட விதத்தில் அறிந்திராதவர்கள் ஏதாவது ஒரு விண்ணப்பம் அல்லது விருப்பத்தை கொண்டிருப்பவர் களாயிருந்தால் மறுபடியுமாக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? காரியம் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை முன்பின் அறிந்திராக இங்குள்ள ஒவ்வொரு நபரும். சரி. எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர். எனக்கு அறிமுகமான மக்களிடம் நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால், சிலர், "அவர் அவர்களை அறிந்திருக்கின்றார்" என்று கூறுவர். ஆகவே எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களின் கரங்கள் தான் அதிக அளவில் ஜனக்கூட்டத்தில் மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுதும், கர்த்தராகிய இயேசு இதை அருளுவாரானால், உங்களின் ஏனையோர் அதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து, உங்கள் சுகமளித்தலை அல்லது என்னவாயிருந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்வீர்களா-? தயவுகூர்ந்து, நாம் நம்முடைய இருதயத்தில் "இயேசுவே, எல்லா சந்தேகத்தையும் எடுத்துப் போடும்” என்று ஜெபிக்க மாத்திரம் செய்வோம். என்னவென்றால், இயேசுவால் சந்தேகம் கொள்ளவே முடியாது. நாம் அவருடைய சாயலில் இருப்போமானால், நாம் விசுவாசிப்போம். அவர் தேவனை விசுவாசித்தார், அவர் தேவனுடைய சித்தத்தை செய்யவே வந்தார். மனிதன் என்ன கூறினான் என்றும் அல்லது யாரோ ஒருவர் என்ன கூறினார் என்பதைக் குறித்தும் அவர் அக்கறை கொள்ளவேயில்லை; ஒரு காரியத்தை செய்யவே மாத்திரம் வந்தார்: தம்முடைய பிதாவிற்கு ஒரு வேலைக்காரனாக, ஊழியக்காரனாக இருக்க மாத்திரமே வந்தார். 48. நான் ஒரு பெண்ணில் மேல் என் கவனத்தை செலுத்தப் போகிறேன், அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கின்ற கறுப்பு நிறத்தவரான பெண் ஆவாள். என்னை அவளுக்கு தெரியாது என்று தன் கரங்களை உயர்த்தினாள் என்று நான் நம்புகிறேன். ஆதலால் அது ... சரி, அவர்களில் இரண்டு பேர் இருக்கின்றனர். சரி, பெண்களாகிய உங்களில் ஒருவருக்குகூட என்னை உங்களுக்கு தெரியாது, எனக்கும் உங்களை தெரியாது. அதுசரியே என்றால், எனக்கு உங்களுக்கு முன்பின் தெரியாது என்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? சரி. சரி. நாம் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லாத அந்நியர் ஆவோம். வேதாகமத்தில் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது... காரணம் என்னவென்றால், நீங்கள் கறுப்பு நிறத்தவரான மக்கள் என்று நான் கவனித்தேன். பாருங்கள். ஒரு சமயம் வேதாகமத்தில் பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தில் ஒரு ஸ்தீரி இருந்தாள். இயேசு அந்த கிணற்றண்டையில் வந்தார், அங்கே இந்த சமாரிய ஸ்திரீ இருந்தாள். அவள் வேறொரு இனத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாள். இயேசு அவளிடம் சில நிமிடங்கள் பேசினார். அவளுக்கு உள்ள பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ளும் வரைக்குமாக அவளிடமாக பேசி, பிறகு அவளுக்கு இருந்த பிரச்சனை என்னவென்று அவளிடமாகக் கூறினார். அவர் அவளிடமாக அவளுடைய பிரச்சனை என்ன என்று கூறினபோது உடனே அவள், "ஆண்டவரே, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது இந்த காரியங்களை நமக்கு அறிவிப்பார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்று கூறினாள். ஆனாலும், அவர் யாராக இருந்தார் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆம், அவள் அவரிடமாக, "நீர் யார்-?” என்று கேட்டாள். அதற்கு இயேசு "உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று கூறினார். அவள் எந்த இடத்திலிருந்து வந்திருந்தாளோ அந்த இடத்திற்கு உடனே சென்று “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், என்ன தவறாயிருக்கின்றது என்றும் என்னிடம் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் அந்த அதே மேசியா தானோ-?” என்று கூறினாள். 49. பெண்களாகிய நீங்கள் அதை எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா-? நிச்சயமாக, பரிசுத்த யோவான், 4வது அதிகாரம், சரி, இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றால், நீங்கள் என்னிடமிருந்து இருபது முழ அளவு தூரத்தில் நின்றிருக்கிறீர்கள், இல்லை நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆகவே, அந்த அதே இயேசு தாமே நமக்கு இடையில் இருந்து பேசி இங்கிருந்து எதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதன் உங்கள் தேவையை எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் உங்களுக்கு சத்தியத்தையே கூறியிருக்கிறேன். இந்த வேதாகமம் சரியானதாக இருக்கையில், அவராலே அதைச் செய்யமுடியும். அவரால் செய்யமுடியும் அல்லவா-? அவர் அதைச் செய்வாரானால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அங்கே கடைசியில் உட்கார்ந்து இந்த விதத்தில் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த பெண், அவள் முதுகு பிரச்சனையால் அவதியுறுகிறாள், அவள் அதிலிருந்து சுகமாக்கப்பட விரும்புகிறாள். அது முற்றிலும் சரியே. அது சரியென்றால், பெண்ணே உங்கள் கரத்தை உயர்த்துவீரா, அங்கே அந்த மூலையில் இருக்கின்ற பெண். அதோ நீங்கள் இருக்கிறீர்கள். பெண்ணே, உங்களைக் குறித்து என்ன-? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அவளுக்கு அடுத்ததாக இருக்கின்ற நீங்கள், எனக்கு முன்பின் தெரியாத அந்நியர் என்று கூறினீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு தலையில் கோளாறு உள்ளது, உங்களுக்கு தோல் பிரச்சனையும் இருக்கின்றது. அது சரியென்றால், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? இப்பொழுது வீடு செல்லுங்கள். நீங்கள் இருவரும் சுகமாக்கப்பட்டு செல்லுங்கள். உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கினது. அந்த இயேசு இங்கே இன்றிரவு இருக்கின்றார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களில் சிலரைக் குறித்தென்ன, கட்டடத்தில் உள்ளவர்கள், வேறு எங்காகிலும் இருக்கிறீர்களா-? விசுவாசியுங்கள். 50. இங்கே ஒரு பெண் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் ஒரு போராளி ஆவாள்; அவளை எனக்குத் தெரியும். என்னால் அவளை தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், அந்த ஒளியானது அவளின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. அது செல்வி புரூஸ் ஆகும். இதோ செல்வி புரூஸ், உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. ஒரு சமயம் நீங்கள் புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்டீர்கள். ஆனால், சரியாக அங்கே அந்த கதவண்டையில், முதல் முறையாக நான் பார்த்தபோது.... சொன்னது.... நீங்கள் கதவண்டை நின்றிருந்த போது, நீங்களும் உங்கள் மருத்துவரும் மாத்திரம் அறிந்திருக்கின்ற ஒன்றை பரிசுத்த ஆவியானவர் என்னிடமாகக் கூறினார். அது சரியே, அப்படித்தானே-? இப்பொழுது உங்களுக்கு இருக்கின்ற கோளாறு என்ன என்று அவரால் என்னிடமாகக் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்களை எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று எனக்கு தெரியாது. அதைக்குறித்த எந்த ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஏனென்றால் நீங்கள் புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்டீர்கள். அந்த ஒளியானது உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அது சரியாக அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றது. இப்பொழுது, யாரோ ஒருவர் எழுவதை என்னால் காணமுடிகிறது. அது உங்களுக்காக அல்ல. புற்று நோயைக் கொண்டிருக்கின்ற யாரோ ஒருவருக்காகவே. அது முற்றிலும் சரியே. மேலும் ஒரு பெண் அல்லது ஏதோ ஒன்றை என்னால் காணமுடிகின்றது. அவள் ஒரு பாவியாக இருக்கின்றாள். அவளுக்கு குடிப்பழக்கம் அல்லது ஒன்று இருக்கின்றது. அவர்களுடைய விடுதலைக்காக இரண்டு கைக்குட்டைகளை கொண்டு வந்துள்ளாய், நான் அதன் மீது கை வைத்து ஜெபிக்க அதை இங்கே கொண்டு வந்துள்ளாய். அது கர்த்தர் உரைக்கிறதாவது. முற்றிலும் சரியே. இப்பொழுது, இது உண்மை என்று நீங்கள் தான் ஆமோதிக்க வேண்டும். அது சரிதானே-? அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 51. எனக்குத் தெரிந்திராத யாரோ ஒருவர் அங்கே பின்புறத்தில் தங்கள் கரத்தை உயர்த்தியுள்ளனர். எனக்கு அறிமுகமில்லாத யாரோ ஒருவர் ஆவார். இங்கே, அதோ..... அது என்ன-? அங்கே மூலையில் இருக்கின்றவர், மறுபடியுமாக உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அங்கே நான்கு, ஐந்து பெண்கள் உட்கார்ந்திருக்கின்றனர். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது தவனுடைய ஆவியால் இயக்கப்படுகிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியாக நீங்கள் விவாசிக்கிறீர்களா-? உங்களால் விசுவாசிக்கக்கூடுமானால் .... அங்கே ஒரு -தொப்பியுடனும், மூக்கு கண்ணாடி அணிந்து, வெள்ளை நிறம் போல் காணப்படும் காதணிகள்.... அங்கே உட்கார்ந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பெண்... ஆம், அது உங்களுக்காக அல்ல; அது யாரோ ஒருவருக்காக, அவர்கள் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கின்றார். அது உள்ளுக்குள்ளாக இரத்தம் வடிதல் ஆகும். அவர்கள் ஒரு மருத்துவமனையில் இருக்கின்றனர்; அந்த மருத்துவமனை நியூ ஆல்பனியில் இருக்கின்றது. அதுதான் உண்மையாகும் - பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது. அந்த வாலிபப் பெண், உங்கள் கரத்தை நீங்கள் உயர்த்தினீர்களா-? அங்கே இந்த பக்கத்தில் என்னை இப்படியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பெண். நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் இருதயத்தில் ஒரு வாஞ்சை இருக்கின்றதா-? அதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சரி. நீங்கள் ஜெபி - நீங்களும் கூட யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது யார் என்றால் தன்னுடைய கண்களில் புரை இருக்கும் ஒரு நபராவார். அவள் கண் பார்வை இழந்து குருடாவாள் என்று பயந்து கொண்டிருக்கிறார். அது உண்மை. இப்பொழுது, நீங்கள் அவளுக்காக விசுவாசிப்பீர்களானால், அப்பொழுது அப்பெண் குருடாகமாட்டாள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால் ..... 52. அங்கே கடைசியில் உள்ள இடத்தில் உள்ள அந்த பெண், தன் கரத்தை உயர்த்தியுள்ள பெண்ணிற்கு பின்னால் இருப்பவர்கள், உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கின்றது. அது சரியே. அந்த நரம்புத் தளர்வானது உங்கள் தொண்டையில் இருக்கின்றது. அது சரி. அப்படித்தானே-? அங்கே..... காரியங்கள் அப்படியென்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நான் பேசிக் கொண்டிருக்கின்ற பெண்களாகிய அங்கே பெண்களாகிய நீங்கள், அது சரிதானே-? அங்கே பக்கத்தில் இருக்கின்ற அடுத்த பெண்ணைக் குறித்தென்ன-? நீங்கள் ..... அங்கே உள்ள சகோதரி, நீங்களும் கூட உங்கள் கரத்தை உயர்த்தினீர்கள் அல்லவா. சரி. உங்களுக்கு மூட்டு வலி உள்ளது. அதற்காக நீங்கள் ஜெபம் ஏறெடுக்கப்பட விரும்புகிறீர்கள். அது சரிதானே-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? யாரோ ஒருவர்... யாரோ ஒருவர் சபையின் பின்னால் இருப்பவர், விசுவாசியுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். ஒரு பெண் நேராக என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், இங்கே இரண்டு பெண்களுக்கு நடுவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள், தன் விரலை தன் வாயில் வைத்திருக்கிறாள். அவளுக்கு குடல்வால் அழற்சி (appendicitis) பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. அது முற்றிலும் சரியே. அது சரி என்றால், பெண்ணே உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அதோ அவள் அங்கே இருக்கின்றாள். 53. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? அது என்ன-? அது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகும். அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா-? இப்பொழுது ஒரு நிமிடம்...-?... இயேசுவைப் போல், இயேசுவைப் போல் பூமியில் அவரைப் போல் இருக்க வாஞ்சிக்கிறேன் வாழ்க்கை பயணம் முழுவதிலும் பூமியிலிருந்து மகிமை வரைக்கும் அவரைப் போல் இருக்கமாத்திரம் கேட்கிறேன் 54. இப்பொழுது, இந்த நாளின் சபையின் மரித்த உயிரற்ற நிலையை உங்களால் காணமுடிகிறதா-? இது கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் சம்பவத்திருந்தால் என்ன நடந்திருக்கும்-? அந்த பெண் மிகவும் மெய்சிலிர்க்கப்பட்டு தன் தண்ணீர் குடத்தை கீழே போட்டு ஊருக்குள்ளே ஓடினாள். “அந்த மேசியா இங்கே இருக்கின்றார்” என்று கூறினாள். ஆனால் இன்றைக்கே.... ஆம். புதிய பிறப்பை பெற்றுக் கொள்ளும்படிக்கு இன்னுமாக நீங்கள் பீடத்தண்டை வருவதற்கு போதுமான அளவிற்கு ஒரு பிறப்பின் போது நேரிடுகின்ற ஒரு துடிப்பை நீங்கள் கொண்டிருக்கவில்லை. எங்கோ ஏதோ தவறு காணப்படுகின்றது. அது பரிசுத்த ஆவியை இங்கே இந்த இடத்திற்கு அனுப்பி ஒரு எழுப்புதலை பிறப்பிக்கச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பு, அவருடைய சாயலுக்கு ஒத்ததான ஒன்று இங்கே மக்களின் மத்தியில் அசைந்து அதைச் செய்யும்படிக்கு ஆகும். ஆனால், அப்படியாக ஆகாதிருப்பதின் காரணம் என்ன-? ஏதோ ஒன்றில் குறைபாடு இருக்கின்றது. நமக்கு ஒரு எழுப்புதல் தேவைப்படுகின்றது. எத்தனைப் பேர் வியாதியுள்ளவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள், வியாதிப்பட்டவர்களும், தேவையுள்ளவர்களும், ஒருவர் பேரில் ஒருவர் உங்கள் கரங்களை வையுங்கள். நாம் ஜெபிப்போமாக. சரியாக உடனடியாக இப்பொழுதே, உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருங்கள். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால், சரியாக இப்பொழுதே நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள். 55. நான் மிகவுமாக வியப்படைந்தேன். நாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிறப்பு. எனக்கு தெரிந்த வரை ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வாஞ்சித்து பிரசங்க மேடைக்கு வந்த ஒரு பெண்ணுக்கு அப்படியாக நேர்ந்ததை நான் பார்த்ததில்லை. நான் அவளிடமாக, "பெண்ணே, ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாய்" என்று கூறினேன். அதற்கு அவள், "ஆம், சகோதரன் பிரன்ஹாம்” என்றாள். நாற்பத்து ஒன்பது வயதுள்ள ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். அவளுக்கு இப்பொழுது ஒரு சிறு குழந்தை இருக்கின்றது. அவள் பதினாறு வயது முதற்கொண்டு தன் வாழ் நாள் முழுவதுமாக இந்த மனிதனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தொன்பது, அவருக்கு ஐம்பதிற்கு மேல் இருந்தது. "கர்த்தர் உரைக்கிறதாவது, நீ ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வாய் " என்று அவர் கூறின மாத்திரத்திலே - அது சரியே. அவள் வீடு திரும்பினாள். குழந்தைகளுக்கான துணிமணிகளை அவள் வாங்கி வைத்தாள். மூன்று வருடங்கள் கழித்து, ஐம்பத்து இரண்டு வயதில், அவள் ஆசைப்பட்ட அந்த சிறிய ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். ஏன்-? அது உரைக்கப்படுவதை அவள் கேட்ட மாத்திரத்தில், அது சம்பவித்தாக வேண்டும் என்று அவள் அறிந்திருந்தாள். அது என்ன செய்யும்-? அது அவளை சரியான மனநிலையில், மனப்பாங்கில் வைத்தது. இந்த காரியங்கள் .... பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து இந்த காரியங்களை மக்களிடமாக பேசும்படிக்கு மிகவும் நல்லவராக இருக்கின்றார். நீங்கள் இப்பொழுது அந்த சரியான மனநிலையில், மனப்பாங்கில் நீங்கள் இருப்பீர்களானால், சுமளித்தலானது முடிவு பெற்றுவிட்டது. 56. ஓ கர்த்தாவே, நீர் தேவன், நீர் என்றென்றும் தேவனாக இருக்கின்றீர். நீர் பூமிக்கு வரும்போது எஞ்சியுள்ள ஒரு சிறு மக்கள் கூட்டத்தை மாத்திரமே நீர் கொண்டிருப்பீர் என்று நீர் வாக்குத்தத்தம் பண்ணியிருப்பதை நாங்கள் அறிந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி பண்ணியிருப்பதை நாங்கள் அறிந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். என்ன வந்தாலும் அல்லது என்ன போனாலும் சரி, ஆயத்தமாயிருக்கப் போகிற மக்கள் இருப்பர். தேவனுக்கு மனிதன் கொடுக்கும் தசமபாகம் உண்டு என்று எங்களுக்குத் தெரியும். மக்களின் மத்தியிலும் தசமபாகம் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஒருக்கால் உலகத்தின் அறுப்பிலிருந்தும், காலங்களினூடாக அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் பத்தில் ஒரு பங்கு என்று நாம் கூறலாம். ஓ பிதாவே, நாங்கள் இங்கே அறுத்துக் கொண்டிருக்கையில் ஜெபிக்கின்றோம், நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நகரத்தினூடாக தேடி பாவிகளை உள்ளே கொண்டு வர முயற்சித்து, தேவனுடைய ராஜ்யத்திற்கென்று ஏதாவதொன்றை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் .... நாங்கள் நகரத்திற்குள் செல்கிறோம். அலட்சியத்தை உதாசினத்தை நாங்கள் காண்கிறோம். நாங்கள் அதைக் காண்கிறோம். சோதோமில் லோத்து இருந்தது போல். அது எங்கள் ஆத்துமாவை அலைக்கழிக்கின்றது, பெண்கள் சிகரெட்டுகளை புகைப்பிடித்துக் கொண்டு தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதையும், மது குடிப்பதையும், குடித்து வெறியாட்டம் பண்ணுவதையும், அவலட்சணமான ஆடைகளை அணிந்திருப்பதையும், மற்றும் மனிதன் இச்சித்துக் கொண்டிருப்பதையும் மற்றும் ..... ஓ. சோதோமின் பாவம்... கர்த்தாவே, எங்கள் இருதயங்கள் உள்ளுக்குள்ளாக வியாகுலப்படுகிறது. 57. ஓ, மக்கள் அந்த விதமாக இருந்து, தங்கள் ஆத்துமாக்களை பரிசுத்தப்படுத்தி அதை தேவனுக்கென்று கொழுந்துவிட்டெறியச் செய்யும்படிக்காக இயேசுவின் இரத்தத்தை பெறாதவர்களாயும் இருக்கும் போது எங்கள் விசுவாசம் மிகவும் குறைவான நிலைக்கு தள்ளப்படுவதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனாலும், அவர்கள் அதை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அங்கே மூலையில் இருக்கின்ற சிறு சபைகளானது தங்கள் டாம்ப்ரீன்களையும் , ட்ரம்ஸ் அடித்துக் கொண்டிருக்கின்றன ..... நாம் ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களை கொண்டு வரும்போது அவர்களோ தங்கள் கார்களில் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றார்கள். ஓ, எவ்வளவாக நாங்கள் ... இசை இசைத்தலுக்காகவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், மக்களுக்காக தங்கள் கரங்களை நீட்டும் ஒன்றிற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் பிதாவே. கர்த்தாவே, இதை அருளும், இப்பொழுது உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவி மற்றும் தூதர்களும் இங்கே இந்த சபையில் தங்கள் ஸ்தலங்களில் நின்று கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்தவர்களாய் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். மக்கள் இன்றிரவு வியாதிப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நிறைய பேர் உள்ளனர். கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனின் மூலமாக நீர் இங்கிருப்பதை நீரே காண்பித்தீர். அங்கே வெளியில் அநேகர் அருகில் வந்து கொண்டும், அழைத்துக் கொண்டும், இழுத்துக் கொண்டும் இருந்தனர். ஆனாலும், கர்த்தாவே, நீர் ஒருவர் மாத்திரம் தான் இக்காரியமானது செய்யப்படும்படிக்கு அனுமதிக்க முடியும் என்பதை நீர் அறிவீர். நீர் தேவன் மற்றும் நீர் மாத்திரமே தேவன் . நீர் செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கின்றதை அந்த நோக்கத்திற்காகவே நீர் செய்யும். நீர் பேசினபிரகாரமாக அதுதான் சபைக்கான கடைசி அடையாளமாகும். கடைசி காலமானது இங்கிருக்கிறது. 58. அப்பொழுது நீர் "நான் பூமிக்கு வரும்போது விசுவாசத்தைக் காண்பேனோ-?" என்ற கேள்வியைக் கேட்டீர். நீர், "நான் சபை அங்கத்தினர்களைக் காண்பேனோ-? நான் சபைப் போதகங்களைக் காண்பேனோ-? நான் உத்தமத்தைக் காண்பேனோ-?" என்று கேட்கவில்லை. நீர் "நான் பூமிக்கு வரும் போது விசுவாசத்தைக் காண்பேனோ-?” என்று கூறினீர். கர்த்தாவே, இந்த வியாதியுள்ள மக்கள் தாமே.... அவர்கள் விசுவாசமானது கட்டவிழ்க்கப்படுவதாக. அவர்கள் தங்கள் பதைப்பதைப்புகள் மற்றும் சந்தேகங்கள் மற்றும் பயங்களிலிருந்து வெளியே வருவார்களாக. அவர்களது விசுவாசம் தானே இப்பொழுது இந்தப் பொழுதிலிருந்து கட்டவிழ்க்கப்படுவதாக. அவர்கள் தங்கள் விசுவாசத்தை கட்டவிழ்த்து விடுவார்களானால், வியாதிகளும் துரத்தப்பட்டு ஓடும், பிசாசு தன்னுடைய பிடியிலிருந்து ஓடிப்போவான், அவர்கள் சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையால் விடுதலையாக்கப்படுவார்களாக. பரிசுத்த ஆவி தாமே ஒவ்வொரு இருதயத்துக்குள்ளும் பலமாகச் சென்று, ஒவ்வொரு ஆத்துமாவையும் சுகமாக்குவதாக. கர்த்தாவே, இதை அருளும். இதை நான் கேட்கின்றேன். இன்றிரவு பிசாசானவன் யார் யாரையெல்லாம் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறானோ அவர்களையெல்லாம் விட்டு அவன் செல்லட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாத்தானே, இந்த மக்களிலிருந்து நீ வெளியே போ. தேவனுடைய ஊழியக்காரனாக, இந்த மக்களின் சார்பாக இவர்களுக்கு நான் இரக்கத்திற்காக என் குரலை உயர்த்துகிறேன். ஆமென். 59. இயேசு கிறிஸ்து தாமே தம்மை இன்றைக்கு பூமியில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்களுக்குள்ள எல்லாவற்றையும் கொண்டு இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடு எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்-? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? அப்படியானால் இந்த பழைய பாடலான "நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால்” என்ற இந்த பாடலை நாம் எல்லாரும் சேர்ந்து பாடுவோமாக. நாம் எல்லாரும் இப்பொழுது நின்று கொண்டிருக்கையில் பாடுவோம். இப்பொழுது எல்லாருமாக பாடுவோம். எல்லாரும் சேர்ந்து பாடுவோம். அது எத்தனைப் பேருக்கு தெரியும்-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்-? நேசிக்கிறேன் என்ற பாடல். இப்பொழுது நாம் அவரை ஸ்தோத்தரிப்போமாக. வியாதியுள்ளவர்கள் மற்றும் அவதியுள்ளோர்கள் எல்லாரும் இப்பொழுது எழுந்து நின்று உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். நான் விசுவாசிக்கிறேன். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து நீங்கள் மாத்திரம் உங்கள் விசுவாசத்தை சரியாக இப்பொழுதே கிரியை செய்ய அனுப்புவீர்களானால், தேவனுடைய கிறிஸ்து இங்கே பிரசன்னமாயிருக்கிறது... அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்-? நம்மை அவருடைய சாயலாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பாருங்கள், அவருடைய ஆவி தாமே, இங்கே இப்பொழுதே உங்களுக்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது... எப்படி..... அது எனக்குள்ளாக இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மக்களை எனக்குத் தெரியாது, அங்கே உள்ள அந்த மக்கள், அவர்களுக்கு என்னைத் தெரியாது என்று தங்கள் கரங்களை மேலே உயர்த்தினார்கள். அவர்களை எனக்குத் தெரியாது என்று நானும் என் கரங்களை உயர்த்தினேன். ஆனால், தேவன் அவர்களை அறிவார். அது என்னவாயிருக்கிறது-? கிறிஸ்து தம்மைத் தாமே பிரதிபலித்தல் ஆகும். உங்கள் விசுவாசம் தான் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் காண்கின்ற அந்த புகைப்படத்தில் உள்ள அந்த தூதனால் உறுதிபடுத்தப்பட்ட ஒரு ஊழியத்தில் நான் கொண்டிருக்கின்ற விசுவாசமே அது. நீங்கள் இப்பொழுது காண்கின்ற அந்த புகைப்படமானது மத சம்பந்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்ற மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதினாலே உலகம் முழுவதுமாக அப்படத்தைக் குறித்து அறியப்பட்டிருக்கின்றது. 60. இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அந்த அக்கினி ஸ்தம்பம், அது மாம்சமான போது, தேவனுடைய குமாரன் என்ற உருவில் அது இருந்தது. அவர் "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன் , மறுபடியும் தேவனிடத்திற்கு போகிறேன். நான் திரும்பவும் தேவனிடத்திற்கு போகிறேன்” என்று கூறினார். அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு பிறகு தமஸ்குவிற்கு செல்லும் வழியில் பவுல் அவரை அக்கினி ஸ்தம்ப வடிவில் கண்டான். அந்த ஒளியானது அவனுடைய கண்ணை வெளியே எடுத்துப் போட்டது. பவுல் “ஆண்டவரே நீர் யார்-?” என்று கேட்டான். அதற்கு அவர் "நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்று கூறினார். இயேசு, "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் காஸ்மாஸ், உலக ஒழுங்கு, சபை அங்கத்தினர்கள் இன்னும் பிறர்) என்னைக் காணாது, நீங்களோ என்னை (தனி பிரதிப்பெயர்) காண்பீர்கள். நான் (அந்த அதே இயேசு) இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். ஆமென். ஓ, என்னே. நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 61. ஓ, நாம் அதை மறுபடியுமாக பாடுகையில், மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்தேயினரும், நசரீன்களும். பில்கிரீம் ஹோலினஸ், சர்ச் ஆப் காட் ஆகியோரைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எல்லாருமாக உங்களுக்கு முன்பாகவும், உங்களுக்கு பின்பாகவும் உங்கள் பக்கத்தில் இருக்கின்ற ஒருவருடன் கைகுலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை நாம் இப்பொழுது செய்யும் போது, எல்லோரும் கைளை குலுக்குவோம். நேசிக்கிறேன் (சகோதரன், தேவன் உங்களை ஆசீர்வாதிப்பாராக) நேசிக்கிறேன். முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி.... இப்பொழுது இது தான் உயிர்த்தெழுதலின் ஒழுங்கு வரிசையாகும். "கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை; ஏனெனில், தேவ எக்காளம் முழங்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் மேகங்கள் மேல் அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு...” அவரை சந்திப்பதற்கு முன் நாம் ஒருவரையொருவர் சந்திப்போம், அவரை சந்திப்பதற்கு முன் நாம் ஒருவரையொருவர் சந்திப்போம்... "கர்த்தருக்கு எதிர்கொண்டு போக அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு" எல்லாருமே ஒன்று சேர்ந்து. இப்பொழுது, நாம் ஒருவரையொருவர் சந்தித்து ஒருவரையொருவர் கைகளை குலுக்கிக் கொண்டோம். இப்பொழுது நாம் அவரை வாழ்த்துவோமாக. நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி... 62. ஒரு வாலிபப் பெண் வரிசையிலிருந்து வெளியே சென்று பீடத்தண்டை முழங்கால்படியிட்டு தேம்பிக் கொண்டிருக்கிறாள். அழுதுகொண்டிருக்கிறாள். அந்த விதமான அதே மனசாட்சியுடனான உணர்வை பெற்றவர்கள் இன்னும் மற்றவர் இங்கே உள்ளனரா, அவர்களும் வந்து இப்பெண்ணுடனே முழங்கால்படியிடலாம் அல்லவா-? நீங்கள் நேராக இங்கே வந்து ஒரு இடத்தை எடுத்துக் கொள்வீர்களானால் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறு யாராவது மேலே வருவார்களா-? அது அருமையானதாகும். நேசிக்கிறேன். (கர்த்தாவே, என்னை வனையும், என்னை உருப்படுத்தும்) நேசிக்கிறேன் (குயவனின் வீட்டிற்கு செல்லுங்கள். இன்னும் வேறே யாராவது இந்த இடத்திற்கு வருகிறீர்களா-?) முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி... ஓ, அது அற்புதமானதல்லவா-? ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, இந்த வாலிபப் பெண்ணை நீர் அறிந்திருக்கிறீர். இவளை எனக்குத் தெரியாது. ஆனால், ஏதோ ஒரு விசித்திரமான ஒன்று சில நிமிடங்களுக்கு முன் இந்த பெண்ணை தொட்டது, அதினாலே ஜனக் கூட்டத்தினின்று யாருமே வருந்தி அழைக்காமல் இவள் இங்கே வந்திருக்கிறாள். கர்த்தாவே, அது நீரே. இங்கே இந்த பீடத்தண்டை அவள் முழங்கால் படியிட்டுள்ளாள். அவளுக்கு அருமையானவர்கள் அவளை சுற்றிலும் தங்கள் கரங்களை உயர்த்தி இரக்கத்திற்காகவும், வழி நடத்துதலுக்காகவும், இவளுக்கு ஆவிக்குரிய பலத்திற்காகவும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, அது செய்யப்படக்கடவது. இப்பொழுது அது செய்யப்படக்கடவது என்று எழுதப்பட்டுள்ளது. நீர் தாமே உமக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிருக்கமாட்டீர். உம்மை நேசிச்கிறவர்களுக்கும் மற்றும் உம்மை பின்பற்றுகிறவர்களுக்கும் உம்முடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென்” என்று இருக்கின்றது. இந்த வாலிபப் பெண் தாமே இதை இன்றிரவு ஆணித்தரமாகவும், தேவன் இன்றிரவில் இவளின் இருதயத்துக்குள்ளாக இன்னும் அதிகமாக ஊற்றும்படிக்கு தேவனுடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கின்றவைகளுக்கு அப்பால் பரலோகத்தில் வேறு எதுவும் இல்லை என்பதை இவள் அறிந்துகொள்வாளாக. இவள் பீடத்தண்டையில் முழங்கால்படியிட்டிருக்கையில் இவளுக்கு மிகவும் திருப்திகரமான காரியமானது அளிக்கப்படுவதாக. இவளுடைய இருதயத்தின் வாஞ்சையான காரியங்கள் எல்லாவற்றையும் பரிசுத்த ஆவியானவர் அளிக்கட்டும். கர்த்தாவே, இதை அருளும், இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி .... 63. அருமையான பிதாவே, இந்த பெண்ணின் வாஞ்சையானது.......... அவள் மிக அருமையாக நேசிக்கின்றவைகள். அவரால் மாத்திரமே செய்ய முடிகின்ற காரியத்தை அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே ............ இவைகளை எல்லாம் உம்மிடத்தில் சமர்ப்பித்து உம்முடைய அன்பின் தயவானது ஜீவனைப் பார்க்கிலும் அருமையானது என்று ஜெபிக்கிறோம். "ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை, அன்பின் தயவு (loving kindness) நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும்" என்ற விதமாக தாவீது கூறியிருக்கிறான் . கர்த்தாவே, இவளுடைய இருதயத்தின் வாஞ்சைகளை இவளுக்கு அளியும். உம்முடைய ஊழியக்காரனாகிய நானும் மற்றும் இக்கட்டடத்தில் உள்ள ஏனைய போதகர்களுமாக இவளுடைய விண்ணப்பத்திற்காக உத்தமத்துடனே இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கின்றோம். ஆமென். சகோதரியே நீங்கள் அதை உரிமை கோருவீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 64. இப்பொழுது, இந்த மக்கள் எல்லாரும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற வேளையில்... முழு எண்ணத்தோடும் தங்களை கர்த்தரிடமாக அர்ப்பணிக்கின்ற வேளையில், அவருடைய ஆவி தாமே இந்த கட்டடத்தில் அசைந்து சென்று கொண்டிருக்கின்ற வேளையிலே, ஒரு நிமிடத்திற்கு நாம் எல்லாரும் எழுந்து நிற்போமாக. பீடத்தண்டை வந்திருப்பவர்களை மேய்ப்பர்கள் கவனித்துக் கொண்டு அவர்களிடமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது சிறிது நாம் ஜெபத்திலே இருப்போமாக. அவர் வந்து கொண்டிருக்கின்றார். இப்பொழுது நாம் பாடிக்கொண்டிருப்போமாக. அவர் ஒவ்வொருவரிடமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் ஜெபத்திலே இருந்து நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் இப்பொழுது இயேசு என்னை சுகப்படுத்துகிறார் என்று. நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் இப்பொழுது இயேசு என்னை சுகப்படுத்துகிறார் என்று. அவருடைய வார்த்தையைக் கொண்டு அவரை நம்புகிறேன், அவருடைய வார்த்தையைக் கொண்டு அவரை நம்புகிறேன். அவர் எனக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுக்கிறார் நம்ப முடியும், நம்புவேன், நான் நம்புகிறேன் 65. வாலிபனே, இங்கே பாருங்கள். தேவனுடன் ஒரு ஆழமான சம்பாஷணை உனக்கு வேண்டுமா-? அவர் அதை உங்களுக்கு அளிப்பார் என்று விசுவாசியுங்கள். அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அதை விசுவாசித்து அதை ஏற்றுக் கொள்வீர்களா-? நம்புகிறேன் இயேசு என்னை இப்போது இரட்சிக்கிறார் என்று. அவரை விசுவாசிக்கிற எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தி, "எனக்குள்ள எல்லாவற்றை கொண்டும் நான் அவரை நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். எனக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும். அவர் அற்புதமானவரல்லவா-? இறுதி ஜெபத்திற்கென்று நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துகையில் நாளை இரவு நடைபெறவிருக்கின்ற ஆராதனையை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களிடமாக கேட்டுக்கொள்ளப் போவது என்னவென்றால்.... இப்பொழுது இரட்சிப்புக்காகவும். அவருடன் ஒரு நெருக்கமான நடையைக் கொண்டிருக்கவும் விரும்பி உங்கள் கரத்தை உயர்த்தியவர்கள் ஒவ்வொருவரும், உங்களால் கூடுமானால், சீக்கிரமாக செய்யுங்கள். அதை பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசியுங்கள். உங்களால் அதை உணரமுடிகிறதென்றால், அந்த தத்தெடுக்கப்பட்ட பிள்ளையை எடுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்-? அது தத்ரூபமாக ஆகும் வரைக்குமாக அதை அப்படியே கூறிக்கொண்டே இருங்கள். சுகமளித்தலை ஏற்றுக்கொண்ட நீங்கள், எந்த ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லை என்றால்.... "என் - என் விசுவாசம் அதை அசைக்க போதிய அளவிற்கு இல்லை சகோதரன் பிரன்ஹாம்” என்று கூறுகிறீர்களா, பிள்ளை தத்தெடுத்தல் வழியை பின்பற்றுங்கள். "கர்த்தாவே, நான் சுகமானேன் . அதை இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறிக்கொண்டேயிருங்கள். அது நடந்தேறும். நீங்கள் சரியான மனநிலைக்கு உங்கள் மனதை நிலைக்குள்ளாக்குங்கள் (உங்களுக்கு புரிகின்றதா-?), அப்பொழுது உங்கள் விசுவாசம் சரியாக இருக்கும். அது அதை எடுத்துக் கொள்ளும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 66. இப்பொழுது, நாளை இரவு, ஆராதனை ஏழரை மணிக்கு ஆரம்பமாகும். நாளை இரவு வழக்கமான மணி நேரத்தில் ஆரம்பிக்கும். இந்த ஒவ்வொரு இரவும் ஆரம்பித்தது போல நீங்கள் வந்து சகோதரன் நெவில் மற்றும் மற்ற ஊழியக்காரர்கள் மற்றும் ஒரு எழுப்புதலை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற நாங்கள் எல்லாரும் பேசுவதைக் கேளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நம்மால் அதைக் கொண்டு வரமுடியாது. நீங்கள் தாமே... நீங்கள் அதை ஜெபத்துடனே எங்களிடமாக அதைக் கொண்டு வரவேண்டும். இங்கே வந்து உங்களின் ஒன்று கூடுதலைக் காண்பியுங்கள். தேவன் உங்களோடு இருப்பாராக. இப்பொழுது, நான் விரும்புவது, நாம் ஆராதனையை முடித்த உடனே உங்களால் கூடுமானால்.... சீக்கிரத்தில் கட்டடத்தை விட்டு வெளியே செல்லுங்கள். இங்கே அரை மணி நேரம் ஒத்திகையானது செய்யப்படவேண்டியுள்ளது. மனிதரில் சிலர் சில வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை தாழ்த்தப் போகிறோம். அங்கே ஜனக்கூட்டத்தில் சகோதரன் ஜுனியர் ஜாக்சன் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன் என்று நினைக்கிறேன். சகோதரன் ஜுனியர், இன்றிரவு இங்கே இருக்கிறீர்களா-? நியூ ஆல்பனி மெதோடிஸ்ட் சபையிலிருந்து வருகின்ற ஒரு சகோதரனோ அல்லது.... சரி, சகோதரன் ஜாக்சன், ஜெபம் செய்து இந்த கூட்டத்தை முடிப்பீரா-? (சகோதரன் ஜுனியன் ஜாக்சன் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கின்றார் - ஆசி (ஒலி நாடாவில் காலியிடம் ஆசி).... விவாகத்தில் இருக்கப் போகிறவர்கள் சீக்கிரமாக இப்பொழுது முன்னே வரவும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாளை இரவு நாம் மறுபடியுமாக சந்திப்போம். துன்பமும் வருத்தமும் நிறைந்த பிள்ளையே மகிழ்ச்சியும், ஆறுதலும் அவர் நாமம் கொடுக்கும் செல்லுமிடமெங்கும் அதை.... ******